வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 இளைஞர்கள்! படுகாயத்துடன் மீட்பு!

- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
கோம்பாக்கில் உள்ள ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களைப் படுகாயத்துடன் மீட்டதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இது குறித்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 6 மீட்புப் படை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தததாக Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் 15 முதல் 31 வயதினர் என்றும் 4 ஆண்கள் 3 பெண்கள் என்றும் வெள்ளத்தில் மூவர் அடித்துச் செல்லப்பட்டதாகவும் நால்வர் பாறைகளில் சிக்கியதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். மாலை 5.45 மணிக்கு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாகவும் 2 மணிநேரத்தில் அனைவரையும் மீட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Seorang lelaki patah kaki manakala enam lagi terselamat dalam kejadian kepala air di Jalan Gombak Lama, petang tadi. Tujuh individu itu sedang beriadah sebelum empat dihanyutkan dan tiga terperangkap. Kesemua berjaya diselamatkan, operasi ditamatkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *