700kg கடத்தல் அரிசி மூட்டைகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 11 May, 2025
மே 11,
தேசிய எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் சந்தேகத்திற்குரிய வாகனம் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் பின் தொடர்ந்த அதிகாரிகள் 700 கிலோ அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். வாகனத்தைத் துரத்தியதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையிலிருந்து விலகி விபத்துக்குள்ளானதாகவும் வாகனத்தைச் செலுத்திய சந்தேகநபர் தப்பியதாகவும் PGA எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய வாகனத்திலிருந்து 700 கிலோ எடையிலான வெளிநாட்டு அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமாக இந்த அரிசி மூட்டைகள் மலேசியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. முறையான ஆவணங்களின்றி சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் Tanah Merah காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் வாகனத்தின் அடையாள எண்ணைக் கொண்டு வாகனத்திந் உரிமையாளரைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pasukan Gerakan Am (PGA) menumpaskan penyeludupan beras di Kampung Lalang Pepuyu, Tanah Merah, pada 9 Mei 2025. 700 kg beras dan 50 kg beras pulut dirampas, disyaki diseludup melalui pengkalan haram.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *