நீர் விநியோகிப்புத் திட்டங்களுக்காக 79 கோடியே 64 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு!

- Muthu Kumar
- 09 Jun, 2025
கூச்சிங், ஜூன் 9-
இந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு நீர் விநியோகிப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக கடனாக, மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு 79 கோடியே 64 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது.
வெப்பமான வானிலை, வறட்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளில்
இத்திட்டமும் அடங்கும் என்று துணைப் பிரதமர்
டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்தார்.
இவ்வாண்டு மே மாதம் வரை இம்முயற்சியின் கீழ் 28 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
'நேற்று கம்போங் துபொங் ஜெயாவில் நடைபெற்ற தியாக சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சருமான டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் அவ்வாறு தெரிவித்தார்.
சபாவில் மொத்தம் 12ல் இரண்டு, கிளந்தானில் ஒன்று கானத்தில் மூன்ட் திரெங்கானுவில் சரவாக்கில் ஐந்து, பெர்லிஸில் இரு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில் ஏழு இவ்வாண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், உற்பத்தி செய்யப்படாத நீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் தமது அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வருவதாக ஃபடில்லா குறிப்பிட்டார்.
Kerajaan Persekutuan memperuntukkan RM79.64 juta kepada kerajaan negeri bagi 28 projek bekalan air, termasuk menghadapi musim kering. Tujuh projek dijangka siap tahun ini. Fokus kini ialah menangani isu air tidak berhasil, kata Timbalan Perdana Menteri Fadillah Yusof.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *