9 FRU பணியாளர்கள் பலி! தெலூக் இந்தானில் கோர விபத்து

- Shan Siva
- 13 May, 2025
(இரா.கோபி)
கோலாலம்பூர், மே 13: இன்று காலை, பேராக் தெலுக் இந்தானில், ஒரு FRU லாரியும் வேறொரு
லாரியும் மோதிய விபத்தில், குறைந்தது 9 பெடரல் ரிசர்வ் யூனிட் (FRU) பணியாளர்கள் பலியாகினர்.
FRU லாரியில் 15 பேர் பயணித்த நிலையில் 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பேராக்
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சயானி சைடன் கூறினார்.
தெலுக் இந்தானில்
ஒரு நடவடிக்கைக்குப் பிறகு FRU லாரி ஈப்போவுக்குத் திரும்பிச் சென்று
கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
தெலுக் இந்தான்
தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு காலை 8.45 மணிக்கு விபத்து
குறித்து அவசர அழைப்பு வந்ததாக சயானி கூறினார்.
விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும், ஏழு பேர் லேசான காயங்களுக்கு உள்ளானதாகவும் ஹிலிர் பேராக் காவல்துறைத் தலைவர் பக்ரி ஜைனல் அபிடின் கூறினார்.
இந்த விபத்தில் இந்தியரான சார்ஜன் பெருமாள் என்பவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *