சபாக்காரர்களுக்கே சபா விவகாரம்-ஸாஹிட்டை சைட் தற்காத்தார்!

- Muthu Kumar
- 14 May, 2025
"சபாக்காரர்களுக்கே சபா என்ற உணர்வு குறித்து விமர்சித்திருக்கும் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அமாட் ஸாஹிட் ஹமிடியை, முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சைட் இப்ராஹிம் தற்காத்திருக்கின்றார்.
அத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருக்கும் ஸாஹிட்டை, சபா மாநில துணை முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஜெப்ரி கிட்டிங்கான் கடுமையாக சாடிய பின்னர், சைட் இப்ராஹிம் ஸாஹிட்டை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கின்றார்.
குறிப்பாக மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், கிட்டிங்கானின் பேச்சானது, சொந்தத் தோல்விகளை மறைப்பதற்காக, மத்திய அரசாங்கத் தலைவர்களை இழிவுபடுத்த எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளும் சபா தலைவர்களின் வழக்கமான செயல் என்று சைட் கூறினார்.
"சபாவில் ஏழ்மை நிலை மற்றும் குறைவான முன்னேற்றம் ஆகியவை, மக்களை மறந்து தங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி வரும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களினால் ஏற்பட்டிருக்கின்றன.“சபாவை யார் ஆட்சி புரிந்து வருகிறார்? இவ்வளவு காலமாக மாநில முதலமைச்சர்களாக யார் இருந்து வருகின்றனர்? அவர்கள் தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்தவர்களா? என்று, எக்ஸ் தளப் பதிவொன்றில் சைட் கேள்வி எழுப்பினார்.
“சபாக்காரர்களுக்கே சபா" என்ற உணர்வு. மலேசியர்களை பிளவுபடுத்தும் தன்மையைக் கொண்டது என்று வருணித்திருப்பதற்காக, ஸாஹிட்டை கிட்டிங்கான் கடுமையாகச் சாடியுள்ளார்.மத்திய அரசாங்கத்திலிருந்து சபா விலகக் கூடிய சாத்தியம் இருப்பது குறித்த எச்சரிக்கையையும் விடுத்திருக்கும் கிட்டிங்ஙான். இதன் தொடர்பிலான இறுதி முடிவு சபா மக்களைப் பொறுத்தது என்றார். இதற்கு பதிலளித்த சைட் கூட்டரசிலிருந்து விலகிய பின்னர் சபா எங்கு செல்லும்? என்று கேள்வி எழுப்பினார்.
Ketua BN Zahid Hamidi dikritik oleh Timbalan Ketua Menteri Sabah, Jeffrey Kitingan, kerana kenyataannya mengenai "Sabah untuk orang Sabah". Bekas Menteri Undang-undang Syed Ibrahim mempertahankan Zahid, menyalahkan kepimpinan Sabah atas kemiskinan dan kelemahan pembangunan di negeri itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *