தாய்மொழி பள்ளிகள் குறித்து இனவெறி கருத்துகள்! துவான் இப்ராஹிம் மீது போலீஸில் புகார்!
- Shan Siva
- 13 Sep, 2024
பெட்டாலிங் ஜெயா, செப் 13: மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் மற்றும் அவர்களின் தாய்மொழிகள் குறித்து பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறியதாகக் கூறப்படும் இனவெறிக் கருத்துக்கள் தொடர்பாக டிஏபியின் லிம் லிப் எங் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இன்று காலை ஜின்ஜாங் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
சீனர்களும் இந்தியர்களும் தங்கள் தாய்மொழியில் பேசினால், அது மலாய் சமூகத்தில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் என்று துவான் இப்ராஹிம் நேற்று கட்சியின் முக்தாமரில் கூறியதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய கருத்துக்கள் தவறானவை மட்டுமல்ல, பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் லிம் கூறினார்.
எனவே, துவான் இப்ராகிம் நாட்டின் சட்டங்களை மீறியுள்ளாரா என்பதை அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒற்றுமையை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில், இனவாதத்தின் எந்த வடிவத்தையும் நாம் பொறுத்துக்கொள்ள முடியாது.
இனப் பதற்றம் அதிகரிப்பதைத் தடுக்கவும், மலேசியாவின் நல்லிணக்கத்தை நிலைநாட்டவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்க முகமைகளைக் தாம் கேட்டுக்கொள்வதாக லிம் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *