41 ஹெக்டர் நிலப்பரப்பில் புத்ராஜெயாவில் “மடானி நகரம்”

- Muthu Kumar
- 04 Jun, 2025
புத்ராஜெயா. ஜூன் 4
புத்ராஜெயாவில் 41 ஹெக்டர் நிலப்பரப்பில் "மடானி நகரத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவும் இருக்கிறது.
புத்ராஜெயாவுக்கான ஒரு வியூக நீண்ட கால மேம்பாட்டுத் திட்டமாக இந்நகரம் இருக்கும் என்றும் அங்கு 30 ஆயிரம் பேர் குடியிருக்கக் கூடிய அளவுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்றும், கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸலிஹா முஸ்தப்பா தெரிவித்தார்.
இந்நகருக்கான வடிவமைப்பு செயற்கை நுண்ணறிவு, உயர்தர செயலாக்க இலக்கவியல் வசதிகள் மற்றும் ஒரு பசுமை இயக்க முறை ஆகியவற்றை ஒருங்கிணைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
'நீடித்ததன்மை, நலன்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கொள்கைகளை நிலைநாட்டும் ஒரு குறைந்த அளவிலான கார்பன் நகரத்திற்கான அடித்தளம் இதுவாகும் என்று, ஒரு முகநூல் பதிவில் அவர் குறிப்பிட்டார்.இந்த நகரின் மாதிரியை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் நேற்று அவர் வழங்கினார்.
Kerajaan merancang membina “Bandar Madani” di Putrajaya seluas 41 hektar dengan 10,000 rumah untuk 30,000 penduduk. Projek ini menekankan AI, kemudahan digital canggih, kelestarian dan bandar rendah karbon. Majlis pecah tanah dijadualkan pada 26 Jun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *