மக்கோத்தா இடைத் தேர்தல்- BN - PN நேரடிப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று KLUANG Tunku Ibrahim Ismail பொது மண்டபத்தில் நடைபெற்றது. காலை 10 மணி வரையில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் பாரிசான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த KLUANG மாவட்ட அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Syed Hussien Syed Abdullah வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை அடுத்து பெரிக்காத்தான் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் கால்பந்து விளையாட்டாளர் Mohamad Haizan Jaafar வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Mahkota சட்டமன்ற இடைத்தேர்தல் பெறுப்பாளரான Azurawati Wahid Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் இடையில் நேரடி போட்டி நிலவுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

NENGGIRI இடைத்தேர்தலுக்குப் பின் மீண்டும் பெரிக்காத்தானும் பாரிசானும் நேரடியாகப் போட்டியிடும் நிலை Mahkota சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

பாரிசான் வேட்பாளர் Syed Hussien Syed Abdullah ஆதரித்து அம்னோ தலைவர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi, அம்னோ துணைத் தலைவர் Datuk Seri Mohamad Hasan, ம.சீ.ச தலைவர் Datuk Seri Dr Wee Ka Siong, டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke என ஒற்றுமை கூட்டணிக் கட்சிகளின் தலைவர் வருகையளித்தனர்.

பெரிக்காத்தான் வேட்பாளர் Mohamad Haizan Jaafar ஆதரித்து பெரிக்காத்தான் தலைவர் Tan Sri Muhyiddin Yassin, பெர்சாத்து ஒருங்கிணைப்பாளர் Datuk Seri Mohamed Azmin Ali ஜொகூர் மாநிலப் பெரிக்காத்தான் தலைவர் Datuk Dr Sahruddin Jamal வருகையளித்தனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *