ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும்!

- Muthu Kumar
- 07 Jun, 2025
ஷா ஆலம், ஜூன் 7-
இன்று ஜூன் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெரும்பாலான மாநிலங்களில் மழை பெய்யும் என முன் அறிவிப்பு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர், ஜொகூர், பேராக், பினாங்கு, கெடா, பெர்லிஸ் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நாளை காலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.
சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, புத்ராஜெயா, கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் பிற்பகலில் வெயிலாக இருக்கும் என முகநூலில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 8 ஆம் தேதி, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், லாபுவான் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் வானிலை வெப்பமாக இருக்கும் என்று வானிலை அறிவித்துள்ளது.
அதே நாளில் பிற்பகலில், பேராக், ஜொகூர், பகாங், திரங்கானு, கிளந்தான், சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.ஹரி ராயா ஐடிலாடா கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக உதவும் வகையில் சிறப்பு வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டது.
Jabatan Meteorologi meramalkan hujan lebat di beberapa negeri seperti Selangor, Johor, Perak dan Sabah pada 7 dan 8 Jun. Cuaca panas dijangka pada sebelah petang di beberapa kawasan. Orang ramai dinasihatkan supaya berwaspada menjelang Aidiladha.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *