ஜெய்ன் கொலை வழக்கில் ஆவணங்கள் கசிந்ததா? காவல்துறையுடன் இணைந்து MCMC விசாரணை
- Shan Siva
- 14 Jun, 2024
ஜொகூர்
பாரு, ஜூன் 14:
டெலிகிராமில் ஜெய்ன் ரய்யான் அப்துல் மாட்டினின் கொலை வழக்கில் கசிந்ததாகக்
கூறப்படும் ஆவணங்களை விசாரிக்க மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி
காவல்துறையுடன் இணைந்து செயல்படும் என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி
ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
இது நீதிமன்ற வழக்கு என்பதால் ஆவணங்கள் கசிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் கூறினார்.
இதுவரை, இந்த விஷயத்தில் தாம் இன்னும் தகவலைப் பெறவில்லை என்றும்,
ஆனால் MCMC காவல்துறையை அணுகி, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தாம் கவனிக்கப்போவதாகவும்
அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகத்தில்
பரப்பப்பட்டது விசாரணை ஆவணங்களா? அல்லது
போலி ஆவணங்களா என்பது தங்களுக்குத் தெரியாது. அப்படியானால், விளக்கம் அளிக்க வேண்டிய தரப்பினரும் உள்ளனர், இல்லையெனில், பொய்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும்,"
என்று அவர் கூறினார்.
உள்ளூர்
கண்காணிப்பு நிறுவனம் ஒன்றின் டெலிகிராமில் கசிந்த ஆவணங்களைத் தொடர்ந்து
எம்சிஎம்சி நடவடிக்கை எடுக்குமா என்ற
கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
இந்த
விஷயத்தை அதிகாரிகளிடம் விட்டுவிடவும், எந்த ஊகங்களையும் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *