எஸ்.எம்.கே ராஜா மஹாடி விருதளிப்பு விழா!

- Shan Siva
- 14 Jun, 2025
கிள்ளான், ஜூன் 14: கிள்ளான், எஸ்.எம்.கே ராஜா மஹாடி இடைநிலைப்பள்ளியின் 2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாணவர்களுக்கான விருதளிப்பு விழா, அப்பள்ளி அரங்கில் வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில், ஓம்ஸ் அறவாரியத் தலைவரும், மலேசிய அரிமா
சங்கத்தின் தோற்றுநருமான ஓம்ஸ் பா.தியாகராஜன்
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புக்குரிய மாணவர்களைக்
கௌரவித்தார்.
அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர்
சங்கத் தலைவர் டத்தோ தீபாகரன் நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்ததோடு, பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
மேலும், சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன் உட்பட
பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
பள்ளி முதல்வர் சஃபிருடின்
சாவுட் நிகழ்வை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய ஓம்ஸ் பா.தியாகராஜன்
அனைத்துத் தரப்பினருக்கும் தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
மாணவர்களைத் தரமானவர்களாக உருவாக்கும் ஆசிரியர்களை அவர் பாராட்டினார். சிலாங்கூரில்
சிறப்பான அடைவுநிலையைப் பெறும் மாணவர்களை உருவாக்கும் பள்ளிகளில் தற்போது ராஜா மஹாடி
இடைநிலைப்பள்ளி சிறந்து விளங்குவதாகவும், தொடர்ந்து கல்வி மூலம் பெறும் சாதனைகளால் எதிர்காலத் தலைமுறை சிறப்பான பங்களிப்பை
இந்தத் தேசத்திற்காக முன்னெடுக்க வேண்டும்
என்றும் அவர் கூறினார்.
நிகழ்வில் மாணவர்களின்
கலைப்படைப்புகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக மூவின மாணவர்களும் குழுப்பாடல்
பாடியது வித்தியாசமாய் அமைந்ததோடு, அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
பள்ளியின் சிறந்த மாணவராக முகுந்தன் காத்த பெருமாள் ராஜகுமார் வெற்றிக்
கோப்பையைப் பெற்றார். எஸ்.பி.எம் 2024-ல் சிறந்த அடைவுநிலையைப் பெற்று சாதனை படைத்ததோடு, பள்ளியின் பல்வேறு நடவடிக்கைகளிலும் சிறப்பான பங்களிப்பை
ஆற்றியமைக்காக விருதுகளால் பெருமை பெற்றார். மேலும், சிலாங்கூர் அளவில் சிறந்த மாணவராகவும் இவர் பெருமை சேர்த்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் வாசிப்புத் திட்டத்தில்
முதல்நிலை மாணவியாக மைதிலி மணிவண்ணன் சிறந்த வாசிப்பாளருக்கான அங்கீகாரத்தைப் பெற்றார்.
இப்பள்ளியின் 2024-ஆம் ஆண்டுக்கான, சிறப்பான அடைவுநிலையைப் பெற்று பெருமை சேர்த்த மாணவர்களில் 90 விழுக்காட்டினர் கிள்ளான், சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல்நிலை மாணவர் காத்த பெருமாள் ராஜகுமாரும்
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் சிறப்பான கலைப் படைப்புகளுடன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் ஆசிரியப் பெருமக்களின் நேர்த்தியான ஏற்பாட்டில் நிகழ்வு சிறப்பாக அமைந்தது!
SMK Raja Mahadi mengadakan majlis anugerah pelajar cemerlang 2024 dengan meriah. OMS P. Thiagarajan hadir sebagai tetamu kehormat. Pelajar Mukundan Kathaperumal Rajakumar menerima anugerah pelajar terbaik. Majlis diserikan dengan persembahan seni dan sokongan ibu bapa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *