அனைத்துலக கண்டுபிடிப்பு போட்டியில் தங்கம் வென்ற எஸ்எம்கே ராஜா மகாடி இடைநிலைப்பள்ளி மாணவிகள்!

top-news
FREE WEBSITE AD

 ஹர்ஷாவர்த்தினி, யுகாசைனி மற்றும் யேஸ்வினி ஆகியோர் இணைந்து கே-செமானிஸ் 2024 அனைத்துலக கண்டுபிடிப்புப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றனர். அவர்களின் வழிகாட்டி ஆசிரியை சரிதா, ஆசிரியை அன்பரசி மோகனதாஸ் ஆகியோரின் உதவியால், குழுவினர் தங்களது தயாரிப்பான Eco-Luxe Radiance Primerக்கான மதிப்புமிக்க தங்க விருதை பெற்றனர்.

இந்த நிகழ்வு கே.எஸ். எல். எக்ஸ்பிளேனேட் மாலில் மூன்று நாட்கள் 9-11/9/2024 நடைபெற்றது. ஹர்ஷாவர்த்தினியின் புத்தாக்க கண்டுபிடிப்பான எக்கோ லக்ஸ் ரேடியன்ஸ் பிரிமர் என்ற அழகுசாதனப் பொருள் சூரிய வெப்பத்திலிருந்து தோலை பாதுகாப்பதுடன் இவற்றை பயன்படுத்தும் போது அதன் மணத்தை நுகர்வதால் ஞாபக சக்தியை மேம்படுத்துகிறது.இந்த  கண்டுபிடிப்பின் முக்கிய நோக்கம் கடலில் உள்ள பவளப்பாறையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

புத்தாக்கப் போட்டியில் தனது அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதுடன், ஹர்ஷாவர்த்தினி "பெர்தண்டிங்கான் அமாலான் பிச்சாரா தெர்பாய் பேச்சுப் போட்டியில் பங்கேற்று வெள்ளி விருதை வென்றார். இவர்களின் வெற்றி எஸ் எம் கே ராஜா மகாடி மாணவர்களின் திறன்களையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *