நஜீப்பிற்கு நீதிமன்றம் அனுமதி!
- Shan Siva
- 02 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 2: முன்னாள் பிரதமர் நஜீப்பிற்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை
பாதியாகக் குறைக்கப்பட்ட விவகாரத்தில், வழக்கறிஞர் மன்றத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க நஜீப்பிற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
நஜிப்பின் SRC இன்டர்நேஷனல் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை பாதியாகக் குறைத்த மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து, இவ்விவகாரத்தில் நீதித்துறை மறுஆய்வு நடத்த வேண்டும் என அனுமதி கோரி மலேசிய வழக்கறிஞர் மன்றம் மனு தாக்கல் செய்தது.
இது தொடர்பாக நஜீப்பின் முதன்மை வழக்கறிஞர் முஹம்மது ஷாபி அப்துல்லாவின் கோரிக்கையை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், வழக்கறிஞர் மன்றம் விடுத்த அந்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற
நீதிபதி டத்தோ அமாட் கமால் முஹமட் ஷாஹித், நஜிப்பிற்கு அனுமதி அளித்தார். இது
பொதுநல வழக்கு என நீதிபதி தீர்ப்பளித்தார்.
விசாரணையை செப்டம்பர்
18-ம் தேதிக்கு ஒத்திவைப்பதற்கு முன், மூத்த வழக்கறிஞருக்கு
தனது வாதங்களைத் தாக்கல் செய்ய மூன்று வார கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம்.
ஏப்ரல் 26 அன்று தாக்கல்
செய்யப்பட்ட விண்ணப்பத்தில், ஜனவரி 29 அன்று
நஜீப்பிற்கு வழங்கப்பட்ட மன்னிப்பு வாரியத்தின் முடிவை சட்டவிரோதமானது என்றும், அரசியலமைப்புச்
சட்டத்திற்கு விரோதமானது மற்றும் செல்லாது எனக் கருத வேண்டும் என்றும் மலேசிய
வழக்கறிஞர் மன்றம் கோரியது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *