மகாதீரை நம்ப முடியாது! Akmal Saleh

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜுன் 5,
மலாய்க்காரர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் Tun Mahathir Mohammad தெரிவித்திருப்பதைத் தாம் ஏற்றாலும் மகாதீரை நம்ப முடியாது என அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Akmal Saleh தெரிவித்தார். மலேசியாவில் மலாய்க்காரர்களின் உரிமையும் வாழ்வாதாரமும் காக்கப்பட வேண்டும் என்பதை அம்னோ முழுமையாக ஏற்கிறது என்றாலும் அதற்காக மகாதீர் போன்றவர்களின் தலைமையின் கீழ் அம்னோவும் ஒருங்கிணைவது அவசியமற்றதாகக் கருதுவதாக Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.
உண்மையில் மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றாலும் மகாதீரிடம் ஆட்சியும் அதிகாரமும் இருந்த போதே இதைச் செய்திருக்கலாம். மகாதீர் அம்னோவுக்குச் செய்ததை இன்னும் அம்னோக்காரர்கள் மறக்கவில்லை. ஆனாலும் மலாய்காரர்களை ஒருங்கிணைக்க நினைக்கும் மகாதீருக்கு நல்வாழ்த்தை மட்டும் சொல்கிறோம் என்றும் மகாதீரை இனி நம்ப முடியாது என Datuk Dr Akmal Saleh தெரிவித்தார்.
Ketua Pemuda UMNO, Datuk Dr Akmal Saleh menyatakan walaupun cadangan Tun Mahathir untuk menyatukan orang Melayu diterima, beliau tidak boleh dipercayai. UMNO tidak perlu bersatu di bawah kepimpinan Mahathir dan masih mengingati tindakan beliau terhadap parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *