வியட்நாம் செல்லும் மலேசியர்கள் பயணத் திட்டத்தை ஒதுக்கி வையுங்கள்! – தூதரகம் அறுவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 12: வியட்நாமின் Ha Long மற்றும்   Sa Pa ஆகிய இடங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள மலேசியர்கள் தங்கள் பயணத் திட்டங்களை தற்போதைக்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யாகி புயலின் தாக்கம் இதற்குக் காரணம் என்று வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள மலேசியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய காரணங்களுக்காக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வசிக்கும், வேலை செய்யும் அல்லது பயணிக்க வேண்டிய மலேசியர்கள் வரும் நாட்களில் உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்ச்சியான மழைப்பொழிவு மற்றும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் ஹனோய்யைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட வடக்குப் பகுதி முழுவதும் பரவலான வெள்ளம் ஏற்படலாம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அவசர தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் தூதரகப் பணி அதிகாரியை +849-0418 5610 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *