கடல் பிரியர்களுக்கு MMEA எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 19: கடல் மற்றும் கடலோரப் பகுதிகளைச் சுற்றி எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடும் முன், பொதுமக்கள் மற்றும் கடல்சார் சமூகம் விழிப்புடன் இருக்கவும், வானிலை நிலையை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனமான ‘MMEA’ வலியுறுத்தியுள்ளது.

மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள்,  கப்பல்களை இயக்குபவர்கள் வானிலை மற்றும் கடல் நிலைமைகளைக் கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறு  கோல கெடா கடல்சார் மண்டல இயக்குநர், கடல்சார் கமாண்டர் நூர் அஸ்ரேயாந்தி இஷாக் அறிவுறுத்தினார்.

இது எந்த விரும்பத்தகாத சம்பவங்களையும் தடுக்கும். குறிப்பாக இந்த வாரம் முழுவதும் வடக்கு கடற்பரப்பில் புயல்கள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்று மற்றும் கரடுமுரடான கடல் சீற்றம் ஆகியவை கடற்கரையோரத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு மற்றும் கடல்சார் நடவடிக்கைகளுக்கும் குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்தலாம்.

எனவே, கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து கொள்ளுமாறு தாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம் என்று அவர் கூறினார்.

மேலும், அவசர காலங்களில் விரைவான மீட்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக தனிப்பட்ட PLB  எனப்படும் லொக்கேட்டர் பீக்கான்களை   எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் இன்று ஓர்  அறிக்கையில் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *