லங்காவியில் பல இடங்களில் சரிந்து விழுந்த மரங்கள்! கனமழை மற்றும் புயலில் வீடுகள் பாதிப்பு!
- Shan Siva
- 23 Jun, 2024
லங்காவி, ஜூன் 23: மலேசிய குடிமைத் தற்காப்புப் படைக்கு (APM) இன்று அதிகாலை புயல் காரணமாக லங்காவி தீவு முழுவதும் வேரோடு சாய்ந்த மரங்கள் குறித்து ஒன்பது பேரிடர் அழைப்புகள் வந்துள்ளன.
அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை அவசர அழைப்புகள் வந்ததாக லங்காவி மாவட்ட குடிமைத் தற்காப்பு அதிகாரி கேப்டன் (PA) கைருல் அஃப்சான் எம்.டி யாசின் தெரிவித்தார்.
கனமழை மற்றும் புயலின் காரணமாக வேரோடு பல மரங்கள் சாய்ந்துள்ளதாகவும் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சாலைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் Kampung Mata Ayer, Kelubi, Kubang Badak, Belanga Pechah, and Keda Wang Tok Rendong, as well as Jalan Ayer Hangat, Teluk Yu, Bukit Malut, and Chenang Highway ஆகியவை அடங்கும் என்று அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Not Ali Eh
Tester
kxtyqh