ஆடம்பர கார்களைத் திருடி வந்த ‘கேங் கே-பாய்ஸ்’ கும்பல் கைது! - போலீஸ் அதிரடி!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஜூலை 3: கடந்த ஜூன் 27 முதல் 30  ஆம் தேதி வரை கோலாலம்பூர், ஜொகூர் பாரு மற்றும் பேராக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனையில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு நபர்களைக் கைது செய்ததன் மூலம், கேங் கே-பாய்ஸ் எனப்படும் சொகுசு கார் திருடும் கும்பலை போலீசார் முடக்கியுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் 31 முதல் 54 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர்  டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.

 ஜூன் 24 ஆம் தேதி  42 வயதுடைய ஒருவரிடமிருந்து, கெப்போங்கில் உள்ள தாமன் எஹ்சானில் , தனது முதலாளியின் வாடகை வீடு உடைக்கப்பட்டதாகவும், ஆடி ஆர்8, போர்ஸ் 718 கேமன் மற்றும் சுஸுகி ஸ்விஃப்ட் ஆகிய மூன்று கார்கள் திருடப்பட்டதாகவும் காவல் துறைக்குப் புகார் வந்தது. 

சம்பவத்தின் போது, ​​புகார்தாரரின் முதலாளி சீனாவில் இருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் இழப்பு சுமார் RM700,000 என மதிப்பிடப்பட்டுள்ளது" என்று அவர் ஹுசைன் ஒமார் கான் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூர், ஜொகூர் பாரு மற்றும் பேராக் ஆகிய இடங்களில்  போலிசார் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டனர். இதன் விளைவாகப் போதைப்பொருள் மற்றும் கிரிமினல் குற்றங்களுக்குப் பதிவுசெய்யப்பட்ட 38 வயதான மூளையாகச் செயல்படும் ஒருவர் உட்பட   அனைத்து சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

குற்றவியல் சட்டம் பிரிவு 457 மற்றும் பிரிவு 379A ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *