தஞ்சோங் ஹராப்பான்; கவிழ்ந்த படகை மீண்டும் மிதக்க வைப்பது இக்கட்டானது!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஜூன் 8-

கிள்ளான் துறைமுகம், தஞ்சோங் ஹராப்பானில் கவிழ்ந்த படகை மீண்டும் மிதக்க வைப்பதற்கான நடவடிக்கை" தற்போது இக்கட்டான நிலைக்கு நுழைந்துள்ளது.
பளுதூக்கிப் பொருத்தப்பட்ட ஒரு சிறப்புப் படகைப் பயன்படுத்தி, கவிழ்ந்த படகின் பெரும்பாலான கட்டமைப்பு வெற்றிகரமாக மேற்பரப்புக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

மிதக்கும் செயல்முறை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப் படுவதோடு, படகின் முன்புறத்தில் கயிறுகளைப் பொருத்துவதற்கான பணிகளில் முக்குளிப்போர் ஈடுபட்டுள்ளதாக சிலாங்கூர் கடல்சார் செயல்பாட்டு அதிகாரி, கடல்சார் லெஃப்டினன் முஹமட் ஷஃபிக் சஸாலி தெரிவித்தார்.

“நாங்கள் படகை வெற்றிகரமாக மிதக்கவிட்ட பிறகு, தண்ணீரை வெளியேற்றி,படகின் உட்புறத்தைச் சோதனை செய்வோம். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா இல்லையா" என்பதைப் பார்ப்போம். அதே நேரத்தில், நீரின் மேற்பரப்பில் தேடல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன,” என்று அவர் கூறினார்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 0.3 கடல் மைல் தொலைவில் படகை இழுத்துச் செல்லும் செயல்முறையினால் படகின் கட்டமைப்பில் சில சேதங்கள் ஏற்பட்டது.இருப்பினும், அதன் செயல்பாடுகள் பாதிக்கவில்லை என்றும் முஹமட் ஷஃபிக் கூறினார்.

Usaha menstabilkan bot terbalik di Pelabuhan Klang kini berada di tahap kritikal. Struktur bot berjaya dinaikkan ke permukaan, dan pasukan penyelam sedang memasang tali di bahagian hadapan. Pemeriksaan dalaman akan dilakukan selepas bot berjaya terapung.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *