சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேங் ரக்யாட் சலுகை!

- Shan Siva
- 04 Jul, 2024
கோத்தா கினபாலு, ஜூலை 4: சபாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட தனிநபர் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கும் சிறப்பு வெள்ள நிவாரண உதவித் திட்டத்தை பேங் ரக்யாட் அறிவித்துள்ளது.
வெள்ளம் நூற்றுக்கணக்கான கார்களை மூழ்கடித்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பல குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் வணிகங்கள் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்துள்ளன.
இதனை அடுத்து பேங் ரக்யாட் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ டாக்டர் முகமட் ஹனிஸ் ஒஸ்மான், வங்கி தனது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சுமை மற்றும் சிரமங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறினார்.
மொராட்டோரியம் வசதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்று வங்கி நம்புவதாக அவர் தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *