மகாதீர் அரசாங்கத்தை விமர்சிக்கட்டும்! ஆனால், மகாதீர் மரியாதைக்குரியவர்! – அன்வார்

- Sangeetha K Loganathan
- 13 Jun, 2025
ஜூன் 13,
முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad தொடர்ந்து அரசாங்கத்தையும் தன்னையும் விமர்சித்து வந்தாலும் அவர் முன்னாள் பிரதமர் என்பதால் அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கானச் செலவுகளை அரசாங்கம் ஏற்பதில் எந்த தடையுமில்லை என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். முன்னாள் பிரதமர்கள் அதிகாரப்பூர்வமாகவோ தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்காகவோ வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போது அவர்கள் அரசாங்கத்திடமிருந்து மானியம் பெற முடியும் என்பதை Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார்.
கடந்த மே 30, மகாதீர் ஜப்பானில் நடைபெற்ற Nikkei மாநாட்டுக்குச் சென்றார். அதற்கான செலவீனத் தொகை என மகாதீர் RM486,000 நிதியை விண்ணப்பித்ததாகவும் அங்கே சென்றும் அவர் என்னையே விமர்சித்தார் என்றும் அன்வார் தெரிவித்தார். இது முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள். அவர் விண்ணப்பிக்கிறார். நியாயமான வெளிநாட்டுப் பயணமாக இருந்தால் பிரதமராக நான் விண்ணப்பதை ஏற்றுக் கொள்வதாகவும் விண்ணப்பதை நிராகரிக்கும் அதிகாரம் தமக்கு இருந்தாலும் நிகழ்ச்சிகளின் தரத்தைக் கண்டு தாம் அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் பிரதமரின் விருப்பம் என்பதையும் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். தொடர்ந்து அவர் என்னை விமர்சித்தாலும் அரசாங்கத்தின் சலுகைகள் குறித்து எந்தவோர் எதிர்ப்பானச் செயல்களிலும் தாம் ஈடுபடவில்லை என்றும் அவர் மரியாதைக்குரியவர் என்பதை Datuk Seri Anwar Ibrahim நினைவூட்டினார்.
PM Anwar Ibrahim menyatakan walaupun Tun Mahathir sering mengkritik kerajaan, beliau tetap berhak memohon bantuan kewangan kerajaan bagi lawatan rasmi ke luar negara. Permohonan RM486,000 Mahathir untuk menghadiri persidangan Nikkei di Jepun turut diluluskan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *