அமைச்சர் பதவியிலிருந்து விலகிய RAFIZI & NIK NAZMI இருவருக்கும் இறுதி வாய்ப்பளித்த அன்வார்!

- Sangeetha K Loganathan
- 13 Jun, 2025
ஜூ 13,
பி.கே.ஆர் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய Rafizi, Nik Nazmi இருவரும் தற்போது விடுமுறையில் மட்டுமே இருப்பதாகவும் அவர்களில் அமைச்சர் பதவி விலகல் குறித்தான முடிவை மறு ஆய்வு செய்யவும் கவனமாகச் சிந்திக்கவும் பிரதமரும் பி.கே.ஆர் கட்சி தலைவருமான Datuk Seri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார். பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli, இயற்கை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi இருவரும் மீண்டு அமைச்சரவைக்குத் திரும்ப வேண்டும் என தனது விருப்பத்தை Datuk Seri Anwar Ibrahim வெளிப்படுத்தினார்.
கட்சித் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை ஒதுக்கி வைத்து ஒருவருக்கொடுவர் தங்கள் பிணைப்பை வலுப்படுத்த வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim கேட்டுக்கொண்டுள்ளார். அம்னோவுடன் எனக்கு இல்லாத பகையா? எவ்வளவோ எதிர்ப்புகளை அம்னோவால் நான் எதிர்நோக்கியிருக்கிறேன். ஆனால் மக்கள் நலனுக்காகவும் நிலையான ஆட்சிக்காகவும் அம்னோவுடன் இணைந்து இப்போது நல்லாட்சியை வழங்கி வருகிறேன். அப்படி இருக்க ஒன்றாக வளர்த்தெடுத்த கட்சி இது, ஒருவருக்கொருவர் நண்பர்களாக இணைந்து மீண்டும் பி.கே.ரில் பணியாற்ற வேண்டும் என Datuk Seri Anwar Ibrahim கேட்டுக் கொண்டார்.
PM Anwar Ibrahim memberi peluang kepada Rafizi Ramli dan Nik Nazmi untuk menimbang semula keputusan meletak jawatan selepas kekalahan PKR. Anwar berharap mereka kembali ke Kabinet demi kestabilan kerajaan dan menyeru PKR bersatu demi rakyat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *