இந்தியர்களுக்கு 4 மாதங்களில் RM 130 மில்லியன் நிதி. அன்வாருக்கு நன்றி! - துணையமைச்சர் Yb.Ramanan

top-news
FREE WEBSITE AD

வணிகத்துறையில் இந்தியச்  சமூகத்தினர் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார உயர்வுக்குக் கைகொடுக்கவும் தனது தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு சிறப்பாகச் செயலபட்டதில் கடந்த 4 மாதங்களில் 130 மில்லியன் இந்திய வணிகர்களுக்காக வழங்கப்பட்டுள்ளதாக அதன் துணை அமைச்சர் DATUK RAMANAN இன்று தெரிவித்தார். இந்தியர்களின் வாழ்வாதார மேம்பாட்டில் அக்கறை கொண்டுள்ள அரசாங்கமாக ANWAR தலைமையிலான MADANI அரசு திகழ்வதாகத் துணை அமைச்சர் DATUK RAMANAN தெரிவித்தார். 

BANK RAKYAT  வாயிலாக BRIEF-i திட்டத்திற்கு RM 50 மில்லியன், AMANAH IKTHIAR PENN திட்டத்திற்கு RM 50 மில்லியன்,TEKUN SPUMI திட்டத்திற்கு RM 30 மில்லியன் என அன்வார் தலைமையிலான அரசு இந்தியர்களின் வணிக மேம்பாட்டுக்காக மட்டும் வழங்கியுள்ளதாகவும் அதனை முழுமையாக இந்தியர்களுக்குச் சென்றடையும் பொறுப்பு தமக்கு இருப்பதை உணர்ந்து தாம் துணை அமைச்சர் பொறுப்பில் இருப்பதாகவும் துணை அமைச்சர் DATUK RAMANAN தெரிவித்தார். 

கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை TEKUN SPUMI திட்டத்தில் கூடுதலாக எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் இப்போது மொத்தமாக RM 60 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னதாக AMANAH IKTHIAR திட்டத்தில் RM20 மில்லியன்  மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது கூடுதலாக RM 50 மில்லியன் என மொத்தம் வெ.70 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இக்கூடுதல் நிதி அனைத்தும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்கு மட்டும் வழங்கியுள்ளது. இந்தியர்களின் வாழ்வாதாரத்தில் மடானி அரசாங்கம் அக்கறையும் பொறுப்பும் கொண்டுள்ளது, இது போன்று இந்தியர்கள் மீது அக்கறையான அரசிடம் நமக்கானத் திட்டங்களைப் பெற்று வாழ்வில் உயர்வதற்கான வழியை நாங்கள் அமைக்கிறோம், இது முழுக்க முழுக்க பிரதமர் அன்வார் அவர்கள் நம் இந்தியர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்துவதாகத் துணை அமைச்சர் DATUK RAMANAN தெரிவித்தார். 

நிபோங் திபால் புக்கிட் ஜாவி கோல்ப் ரிசோர்டில் நடைபெற்ற இந்திய வணிகர்களுக்கான சந்திப்புக் கூட்டத்தில் பேசிய டத்தோ ரமணன் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் Dato' Haji Abdullah Sani, Pengerusi TEKUN Nasional, YB Kumaresan ADUN Batu Uban, Ketua Pegawai Eksekutif TEKUN Nasional Dato' Adam Abd Ghani, En Misman Hussin Ketua Bahagian Perkhidmatan Korporat, Puan Haliyatul Asma Pengurus TEKUN Negeri Pulau Pinang, Dato' Parthiban Pengerusi MAICCI, Pengerusi IPF Pulau Pinang Dr. Kumaresan dan En Suresh Pengerusi KORPIMAS ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *