இலக்கிடப்பட்ட டீசல் மானியம்... கடத்தல் காரர்களைக் களையெடுக்க உதவும்! - ஃபோம்கா கருத்து
- Shan Siva
- 11 Jun, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11: டீசல் மானியங்களை
நியாயப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள், விரயம் மற்றும்
எரிபொருள் கடத்தலைத் தடுக்க உதவும் என்று
மலேசிய நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பான ஃபோம்கா சுட்டிக்காட்டியுள்ளது
தகுதியான வர்த்தக வாகன
இயக்குனர்கள் மானிய விலையில் டீசலை குறிப்பிட்ட நிலையங்களில் வாங்க அனுமதிக்கும் ‘ஃப்ளீட் கார்டுகள்’ கறுப்பு சந்தை
நடத்துபவர்கள் மற்றும் எரிபொருள் கடத்தல்காரர்களை களையெடுக்க உதவும் என்று ஃபோம்காவின்
தலைமைச் செயல்முறை அதிகாரி சரவணன் தம்பிராஜா கூறினார்.
இந்த ஆபரேட்டர்கள் மற்றும்
கடத்தல்காரர்களை குறிவைப்பதன் மூலம், கடத்தல் மற்றும் கசிவு காரணமாக ஏற்படும் நிதி இழப்புகளை படிப்படியாக சமாளிக்க
முடியும் என்று FMT ஊடகத்திற்கு வழங்கிய
செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரியில், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் அர்மிசான் முகமட் அலி, தினமும் மூன்று மில்லியன் லிட்டர் டீசல் நாட்டிலிருந்து கடத்தப்படுவதாகக் கூறினார், இதனால் நாளொன்றுக்கு RM4.5 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டை நாடுகளை விட மலேசியாவில்
டீசலை மானியம் மலிவாக வாங்குவதால், கடத்தல்காரர்கள் இந்த முறையை கையாள முயற்சிக்கிறார்கள் என்று அவர் கூறினார். எனவே, அரசு அமலாக்கத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *