வட சுமத்ராவில் நிலநடுக்கம் மலேசியாவிலும் உணரப்பட்டது!

- Muthu Kumar
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12-
இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் நேற்று மாலை 4.57 மணியளவில், ரிக்டர் அளவைக் கருவியில் 5.9ஆகப் பதிவான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மியூலாபோ எனுமிடத்திலிருந்து சுமார் 107 கிலோ மீட்டர் தென் கிழக்கில் | உள்ள கடல் பகுதியில் 74 கிலோ மீட்டர் ஆழத்தில் அது மையம் கொண்டிருந்ததாக, நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மலேசிய வானிலை ஆய்வு இலாகா (மெட்மலேசியா) தெரிவித்தது.
அதனால் ஏற்பட்ட அதிர்வுகள், மேற்கு தீபகற்ப மலேசியாவில் உள்ள பல பகுதிகளின் உணரப்பட்டதாகவும் அது கூறியது.எனினும், இதனால் மலேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
Satu gempa bumi sederhana berukuran 5.9 pada skala Richter berlaku di perairan Sumatera Utara, Indonesia. Gegaran turut dirasai di beberapa kawasan di Semenanjung Malaysia. Tiada amaran tsunami dikeluarkan oleh MetMalaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *