பாஸ் கட்சியின் HIV ஒழிப்பு புதிய கொள்கை!

- Shan Siva
- 12 May, 2025
கோலாலம்பூர், மே 12: மலேசியாவில் எச்.ஐ.வி ஒழிப்புக்கான தனது புதிய கொள்கையை பாஸ் வெளியிட்டுள்ளது.
இது 2030 ஆம்
ஆண்டுக்குள் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தை
நிறைவு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கிய அக்கட்சியின்
“கெட் டு ஜீரோ” முயற்சி, எச்.ஐ.வி பரவலை
நிர்வகிப்பதற்கான இஸ்லாமிய கோடுபாடுகள அடிப்படையாகக் கொண்ட ஒரு முயற்சி என்று பாஸ்
கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.
கோல திரெங்கானு
நகர சபை ஓரினச்சேர்க்கைக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, இந்த திட்டத்தின் அறிவிப்பு வந்துள்ளது.
இளைஞர்கள், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலின மற்றும் திருநங்கை) சமூகம் போன்ற ஆபத்தில் உள்ள
குழுக்களிடையே எச்.ஐ.வி தொற்றுகளை முன்கூட்டியே தடுப்பதுதான் கெட் டு ஜீரோ
“இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலின்” முக்கிய அம்சம் என்று பாஸ் சுகாதார பணியகத் தலைவர்
டாக்டர் அஹ்மத் யூனுஸ் ஹைரி கூறினார்.
LGBT பிரச்சினை
வளர்ந்து வரும் கவலையாக மாறியுள்ளது, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று
யூனுஸ் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *