'மலேசிய மடானியின் நேசிக்கப்படும் மக்கள்' கருப்பொருளில் தேசிய தினக் கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 12-

2025ஆம் ஆண்டு தேசிய தினம் மற்றும் மலேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு 'மலேசிய மடானியின் நேசிக்கப்படும் மக்கள் என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் மலேசிய மடானி சின்னம். அக்கொண்டாட்டங்களின் அதிகாரப்பூர்வ சின்னமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஒற்றுமை. நல்வாழ்வின் மதிப்புகளை நிலைநிறுத்தும் மலேசியாவின் 289 திட்டங்களுக்கு ஏற்ப மக்களின் நலன் எப்போதும் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் முன்னுரிமையை இக்கருப்பொருள் பிரதிபலிப்பதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க பல முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் முதலாவது தேசிய மாதம் அறிமுக விழா ஜூலை 27ஆம் தேதி ஜொகூர், மூவாரில் உள்ள தஞ்சோங் எமாஸ் சதுக்கத்தில் ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவை அடங்கும்.

2025ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறும் வேளையில், இவ்வாண்டின் மலேசிய தினக் கொண்டாட்டம் பினாங்கில் நடைபெறும்," என்றார் அவர்.நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ஃபாஹ்மி ஃபட்சில் கூறினார்.

MERDEKA COUNTDOWN, 2025 ஜாலூர் கெமிலாங் பறக்கவிடுதல். நாட்டின் தலைவர்களை நினைவுக் கூறும் நிகழ்ச்சிகள் உட்பட 14 கூடுதல் நிகழ்ச்சிகள் HKHM2025 கொண்டாட்டம் முழுவதும் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tema rasmi Hari Kebangsaan dan Hari Malaysia 2025 ialah “Rakyat Disayangi, MADANI Malaysia” dengan logo MADANI dijadikan simbol rasmi. Pelbagai program termasuk pelancaran Bulan Kebangsaan pada 27 Julai di Johor dan sambutan Hari Malaysia di Pulau Pinang turut dirancang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *