நாடு தழுவிய அளவில் கோலாகல விசாக தினக் கொண்டாட்டம்!

top-news
FREE WEBSITE AD


(நமது நிருபர்)

கோலாலம்பூர், மே 13-

சித்தார்த்த கௌதமரின் பிறப்பு, ஞானம் மற்றும் இறப்பு ஆகியவற்றை நினைவுகூறும் விசாக தினம் நேற்று நாடு தழுவிய நிலையில் கொண்டாடப்பட்டது.கௌதம புத்தரின் வாழ்க்கை நெறி, இன்றளவும் பலரின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் போதனைகளை பின்பற்றும் பலர் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள மஹா விஹாரா புத்த ஆலயத்தில் நடத்தப்பட்ட சிறப்பு வழிபாட்டில் திரளாக கலந்து ஆசிபெற்றனர்.

காலை எட்டு மணி தொடங்கியே பௌத்த மதத்தினர்,சீனர்கள், இந்தியர்கள், வெளிநாட்டவர்கள் என்று பக்தர்களும் பொதுமக்களும் மஹா விஹாரா புத்த ஆலயத்தில் கூடத் தொடங்கினர்.'பரிவும் ஞானமும் நல்லிணக்கத்தின் அடித்தளங்கள் என்ற கருப்பொருளில் ஆலயத்தில் இவ்வாண்டுக்கான விசாக தினம் கொண்டாடப்பட்டது.

இதைத் தவிர்த்து ஆலயத்தில் மேலும் பல சடங்குகள் அமைதியாக நடைபெற்றாலும் மாலை மணி ஆறுக்கு மேல் நடைபெறும் அணிவகுப்பு ஊர்வலமே விசாக தினத்தின் முத்தாய்ப்பாகும்.30 வாகனங்களை உட்படுத்தி இம்முறை நடைபெறும் அணிவகுப்பில் சுமார் 25,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்று ஆலயத் தரப்பினர் கணித்துள்ளனர்.

இதனிடையே, சிலாங்கூர் மாநிலத்தில் பல ஆலயங்களில் நேற்று இக்கொண்டாட்டம்
களை கட்டியிருந்த வேளையில், கோல லங்காட் ஜெஞ்சாரோமில் உள்ள புத்த ஆலயத்தில் சுமார் 30,000 பேர் விசாக தின சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். விசாக தினத்தை முன்னிட்டு கடந்த வாரம் சனிக்கிழமை முதலே ஆலய நிர்வாகம் சிறப்பு வழிப்பாடுகளை மேற்கொண்டு வந்தது.

பேராக் தம்புனில் அமைந்திருக்கும் புத்த ஆலயத்தில் நடைபெற்ற விசாகதினத்தில் ஆயிரக்கணக்கான பௌத்தர்கள் மெழுகுவத்திகளை ஏற்றி வழிபாட்டில் கலந்து கொண்டனர்.ஈப்போவில் உள்ள புத்தர் ஆலயத்திலும் காலை மணி 8 முதல் பௌத்தர்கள், விசாக தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தும்பாட் (கிளந்தான்) வழக்கம் போல இவ்வாண்டும், கிளந்தான், தும்பாட் பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் புத்த பக்தர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருந்தது.ஆண்டு தோறும் இவ்வாலயத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்படும் விசாக தினம் மூன்று நாட்களுக்குக் கொண்டாடப்படும்.

Hari Visakha disambut meriah di Malaysia, termasuk di Maha Vihara, Kuala Lumpur, dengan lebih 25,000 peserta hadir. Sambutan memperingati kelahiran, pencerahan, dan kematian Siddhartha Gautama dengan upacara dan perarakan. Majlis serupa turut diadakan di Selangor, Perak, Ipoh, dan Kelantan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *