SPM-மில் 10 A எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் மெட்ரிக்குலேஷன்! பிரதமர் உறுதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்‌, ஜூலை 1: எஸ்பிஎம்‌ தேர்வில்‌ 10ஏ அல்லது அதற்கு மேல்‌ சிறப்புத்‌ தேர்ச்சி பெற்றிருக்கும்‌ மாணவர்கள்‌ எந்த இனத்தவராக இருந்தாலும்‌, அவர்களுக்கு மெட்ரிக்குலேஷன்‌ கல்வித்‌ திட்டத்தில்‌ நிச்சயம்‌ வாய்ப்பு வழங்கப்படும்‌ என்று, பிரதமர்‌ டத்தோ ஸ்ரீ அன்வார்‌ இப்ராஹிம்‌ உறுதியளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும்‌ பிரதமர்‌ தெரிவித்துள்ளார்‌. எனினும்‌, இதற்கு முன்னர்‌ வழங்கப்பட்ட பூமிபுத்ரா மாணவர்களுக்கான கோட்டா முறை, கூட்டரசு அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ குறிப்பிடப்பட்டிருப்பதுபோல்‌ நிலைத்திருக்கும்‌ என்று அவர்‌ தெரிவித்தார்‌. இதற்கு முன்னர்‌, எஸ்பிஎம்‌ தேர்வில்‌ மாணவர்கள்‌ தேர்ச்சி பெறும்போதும்‌ பின்னர்‌ கல்வி வாய்ப்பு எல்லையை அதாவது கோட்டாவைக்‌ கடந்த பிறகும்‌, சிறு பிரச்சினைகளை எழுப்பும்‌.

ஆதலால்‌, கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌, து தொடர்பான பல்வேறு விவகாரங்கள்‌ குறித்துப் பேசப்பட்டது. அதனை மையமாக வைத்து, எந்த மொழிப்‌ பள்ளிகளிலும்‌ 10ஏ அல்லது அதற்கு மேல்‌ சிறப்புத்‌ தேர்ச்சிப்‌ பறும்‌ மாணவர்கள்‌. ஒதுக்கப்படாமல்‌ அவர்கள்‌ அனைவருக்கும்‌ எந்த மெட்ரிக்குலேஷன்‌ மையத்திலும்‌ வாய்ப்புகள்‌ வழங்குவதென்று அரசாங்கம்‌ உத்தரவாதம்‌ அளிக்க வேண்டும்‌. இதன்‌ வழி, இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும்‌ நாட்டை நேசிக்கும்‌ உணர்வை விதைப்பதற்காகஇப்பிரச்சினைக்குத்‌ தற்காலிகத்‌தீர்வை நம்மால்‌ காண முடியும்‌.இப்பிரச்சினை இனியும்‌ ஓர்‌ இன விவகாரமாக ஆக்கப்படுவதைக்‌ காண நான்‌ விரும்பவில்லை என்று நிதி அமைச்சருமான அன்வார்‌ குறிப்பிட்டார்‌.

கோலாலம்பூர்‌, புக்கிட்‌ ஜாலில்‌ தேசிய அரங்கில்‌ நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 2024 ஆம்‌ ஆண்டு தேசியப்‌ பயிற்சி வார உச்சநிலைக்‌ கூட்டத்தில்‌ உரையாற்றும்போது பிரதமர்‌ இதனைத்‌ தெரிவித்தார்‌.  அரசாங்கத்தின்‌ இந்த முடிவு குறித்த முழுத்‌ தகவல்களை, கல்வி அமைச்சர்‌ ஃபட்லினா சிடேக்‌ இன்ற விரிவாக அறிவிப்பார்‌ என்றும்‌ அன்வார்‌ தெரிவித்தார்‌!                                                                                                                                

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *