10 A மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் இடம்; எந்தப் பிரச்னையும் இல்லை! - உயர்கல்வி அமைச்சு உறுதி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜுலை 1: 2023 ஆம் ஆண்டு SPM-ம்மில் 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள், ஆனால் பொதுப் பல்கலைக்கழகங்களில் மெட்ரிகுலேஷன் மற்றும் அடித்தளத் திட்டங்களில் நுழையத் தவறியவர்கள் தங்கள் படிப்பை மேற்கொள்வதற்கான இடத்தை வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

 

மாணவர்களை அடையாளம் காண உயர்கல்வி அமைச்சும், (MOHE) கல்வி அமைச்சும் (MOE) இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

 

அவர்கள் மெட்ரிக்குலேஷனில் ஒரு இடத்தைப் பெறாமல் போகலாம், ஆனால் அவர்கள் இன்னும் பொதுப் பல்கலைக்கழகங்களில் அடித்தளத் திட்டங்களில் நுழைய முடியும். அவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும் அல்லது ஸ்காலர்ஷிப் கிடைத்தாலும் சரி அவர்கள் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

10ஏ மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.

 

ஏனெனில் பல்கலைக்கழக அடித்தள திட்டங்கள் மற்றும் மெட்ரிகுலேஷன் ஆகியவற்றில் அவர்களுக்கு இடமளிக்க போதுமான இடங்கள் உள்ளன  என்று அவர் இன்று கான்கார்ட் கிளப் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

 

10ஏ மற்றும் அதற்கு மேல் பெற்றவர்கள் அல்லது அனைத்து மதிப்பெண்களையும் பெற்றவர்கள் ஆனால் இரண்டு திட்டங்களிலிருந்தும் எந்த சலுகையும் பெறாதவர்கள் மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.

 

நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற 2023 SPM வைத்திருப்பவர்கள் இனம் அல்லது பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு மெட்ரிகுலேஷன் திட்டத்திலும் இந்த ஆண்டு முதல் இடம் பெறுவது உறுதி என்று அறிவித்தார். வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

இதனையடுத்து சம வாய்ப்புகளை உறுதி செய்வதற்கும் சிறந்த மாணவர்களை அங்கீகரிப்பதும் அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்றும், இந்த முடிவை அரசியலாக்க வேண்டாம் என்று அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டுவதாகவும் ஜாம்ப்ரி கூறினார்.

 

பூமிபுத்ரா ஒதுக்கீடு பாதிக்கப்படவில்லை, ஆனால் அதே நேரத்தில், 10A மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் இடம் பெறுவார்கள். அனைவருக்கும் ஒதுக்க முடியும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *