நாளையத் தலைமுறைக்கான திறமையானவர்கள் இங்கிருந்துதான் உருவாகிறார்கள்! - 'அவிரா' நாடகப் போட்டியில் டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் பேச்சு

top-news
FREE WEBSITE AD

இன்று மலேசியா கிளாந்தான் பல்கலைக்கழகத்தில், ஓம்ஸ் அறவாரியத்தின் ஆதரவில் தேசிய அளவிலான ,'அவிரா நாடகப் போட்டி'  வெகு சிறப்பாக நடந்தேறியது. தமிழ் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு,  தேசிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 10 அணியினர் பங்கேற்றனர்.  இந்நிகழ்ச்சியில், ஓம்ஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன், மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சு.சுரேந்திரன், ஓம்ஸ் குழுமத்தின் இயக்குநர் சீ.சதீஷ் நாயுடு, திரைப்பட இயக்குநர் கார்த்திக் ஷாமளன், மலேசிய கிளாந்தான் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகத்தின் ஆலோசகர்  முனைவர் சதீஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். 

மலேசியாவில் தமிழ் மேடை நாடகங்களின் வரலாற்றில் இளைஞர்களின் நாடகத் திறனை வெளிப்படுத்த மேடைகள் கிடைக்காத  நிலையில், கிளாந்தானில் இம்மாதிரியான நாடகப் போட்டியை நடத்தும் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சிக்குத் தமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும்  டாக்டர் பழனீஸ்வரன் தெரிவித்துக்கொண்டார். நாளையத் தலைமுறைக்கான திறமையானவர்களை இது போன்ற மேடைகளும், போட்டிகளும்தான் உருவாக்கிக் கொடுக்கிறது. எனவேதான் ஓம்ஸ் அறவாரியம் மாணவர்களுக்கான இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது.

ஓம்ஸ் அறவாரியம் பல்கலைக்கழக மாணவர்களுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இப்பல்கலைககழகத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் பயில்வது ஆச்சரியம் அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.இவர்களின் அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஓம்ஸ் அறவாரியம் உறுதுணையாக இருக்கும் என்று டாக்டர் பழனீஸ்வரன் தியாகராஜன் நம்பிக்கையளித்தார். ஓம்ஸ் அறவாரியம் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைய பெருமளவில் ஆதரவை  தந்திருக்கிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களை வழிகாட்ட மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றம் இருக்கிறது . அதற்கு ஆதரவாக ஓம்ஸ் அறவாரியமும் உள்ளது, எனவே மாணவர்கள் தொடர்ந்து செயல்படுங்கள் என என மலேசியத் தமிழ்ப் பேச்சாளர் மன்றத்தின் தலைவர் சு.சுரேந்திரன் தெரிவித்தார். 

அவிரா நாடகப் போட்டியில் துவான்கு பைனூன் ஆசிரியர்க் கல்விக்கழகத்தின் பூம்புகார் அணி 1500 ரிங்கிட்டையும் சுழற்கிண்ணத்தையும் வென்று முதல் நிலையில் வெற்றிப்பெற்றனர்.


துவான்கு பைனூன் ஆசிரியர்க் கல்விக்கழகத்தின் கற்புக் கனல்கள் அணி இரண்டாம் நிலையில் 1000 ரிங்கிட் வென்றது.

மூன்றாம் நிலையில் துவான்கு பைனூன் ஆசிரியர்க் கல்விக்கழகத்தின் மகிழம் அணி 800 ரிங்கிட் வென்றது. 

நான்காம் நிலையில் சரவாக் பல்கலைக்கழகத்தின் முடிவிலி  அணி 700 ரிங்கிட் வென்றது.

ஐந்தாம் நிலையில்துவான்கு பைனூன் ஆசிரியர்க் கல்விக்கழகத்தின் திருவிளையாடல் அணி 500 ரிங்கிட் வென்றது.

ஆறாம் நிலையில் திரங்கானு பல்கலைக்கழகத்தின் ஏழிசைச் சுடர் அணி  300 ரிங்கிட் வென்றது.

ஏழாம் நிலையில்   திரங்கானு பல்கலைக்கழகத்தின் அகடவிகடம் அணி 300 ரிங்கிட் வென்றது.

எட்டாம் நிலையில் துவான்கு பைனூன் ஆசிரியர்க் கல்விக்கழகத்தின் அகரம் அணி 200 ரிங்கிட் வென்றது.

ஒன்பதாம் நிலையில் கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் ரெளத்திரம் பழகு அணி 200 ரிங்கிட் வென்றது.

பத்தாம் நிலையில் கிளாந்தான் பல்கலைக்கழகத்தின் அச்சம் தவிர் அணி 100 ரிங்கிட் வென்றது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *