எதிர்திசையில் வாகனத்தைச் செலுத்திய இளைஞர் கைது!

top-news

மே 11,

சாலையில் எதிர்திசையில் பயணித்த AXIA வாகனமோட்டி காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan உறுதிப்படுத்தினார். முன்னதாக வாகனம் ஒன்று சாலையின் எதிர்திசையில் செல்லும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியது. சாலை நெரிசலில் நின்றுக் கொண்டிருந்த வாகனங்களுக்கு நடுவில் தொடர்ந்து AXIA வாகனம் சென்றதாகவும் 2 லாரிகளுக்கிடையில் AXIA வாகனம் சிக்கிக் கொள்ளும்படியானக் காணொலி சமூகவலைத்தளத்தில் பரவியது.

சம்மந்தப்பட்ட AXIA வாகனமோட்டி அருகிலுள்ள எரிவாயு நிலையத்திற்குச் செல்லும் போது தவறுதலாகச் சாலையின் எதிர்திசையில் பயணித்ததாகவும் TOYOTA VIOS ரக வாகனமும் 2 லாரிகளையும் சேதப்படுத்தியதை 26 வயதாக AXIA வாகனமோட்டி ஒப்புக்கொண்டதாகவும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan தெரிவித்தார். மேலதிகமாக சேதமடைந்த TOYOTA VIOS வாகனமோட்டியிடமும் 2 லாரி ஓட்டுநர்களிடமும் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் வாகனமோட்டிகள் சாலையில் பயணிக்கும் போது முன்னெச்சிரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் M Kumarasan வலியுறுத்தினார்.

Sebuah Perodua Axia dipandu melawan arus sejauh 500 meter sebelum terperangkap antara dua lori di Jalan Gelang Patah–Ulu Choh. Pemandu lelaki berusia 26 tahun sudah tampil beri keterangan. Pihak polis sedang mengesan pemandu lori.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *