பேருந்து விபத்து! ஓட்டுநர் மட்டுமல்ல, பேருந்து நிறுவனமும் தண்டிக்கப்பட வேண்டும்!

- Sangeetha K Loganathan
- 14 Jun, 2025
ஜூன் 14,
15 உப்சி மாணவர்கள் உயிரிழந்த பேருந்து விபத்திற்குப் பேருந்து ஓட்டுநர் மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் துறை சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சர் Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார். விபத்து என்பது தனிநபரால் மட்டுமே நிகழ்வது அல்ல. அதில் தொழில்நுட்பப் பிரச்சனைகளும் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Azalina Othman Said தெரிவித்தார். ஓட்டுநரைத் தண்டிப்பதால் மட்டும் இம்மாதிரியான விபத்துகள் தடுக்கப்படுமா என Datuk Seri Azalina Othman Said கேள்வி எழுப்பினார்.
ஒரு பாலம் இடிந்து விழுந்தால் அப்பாளத்தைக் கட்டிய பொறியியலாளர் மட்டுமல்ல, அதன் குத்தகையாளரையும் கைது செயவதைச் சுட்டிகாட்டிய Datuk Seri Azalina Othman Said பேருந்து விபத்திலும் ஓட்டுநர் மீது மட்டுமல்ல சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் மீதும் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என Datuk Seri Azalina Othman Said வலியுறுத்தினார். தனிநபர் ஒருவருக்குத் தண்டனை வழங்குவதால் குற்றங்கள் கட்டுப்படுத்தபடும் என்பதைத் தாம் உணர்ந்தாலும் இந்த விபத்திற்குப் பேருந்து நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என Datuk Seri Azalina Othman Said வலியுறுத்தினார்.
Menteri Azalina Othman Said menegaskan syarikat bas juga harus dipertanggungjawabkan dalam tragedi bas UPSI yang meragut 15 nyawa. Hanya menghukum pemandu tidak mencukupi kerana masalah teknikal dan kegagalan pengurusan syarikat turut menyumbang kepada kemalangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *