KESAS நெடுஞ்சாலையில் 12 பயணிகளுடன் பேருந்து விபத்து!

top-news

ஜூன் 5,

கட்டுப்பாடை இழந்த பயணிகள் பேருந்து KESAS நெடுஞ்சாலையின் தடுப்புக் கம்பிகளை மோதி விபத்துக்குள்ளானது. Seksyen 17, Shah Alam பேருந்து நிலையத்திலிருந்து ஜொகூர் நோக்கி 12 பயணிகளுடன் கிளம்பிய பேருந்து Subang Jayaலேயே இரவு 9.30 மணிக்கு விபத்துக்குள்ளானதாகவும் பேருந்திலிருந்த 12 பயணிகளில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் ஓட்டுநர் உட்பட மற்றவர்களுக்குச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாகவும் Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் பேருந்துக்கு முன்னாள் சென்றுக் கொண்டிருந்த வாகனம் திடீரென இடதுபுறமாக ஆபத்தான முறையில் திரும்பியதால் வாகனத்தை மோதாமல் தவிர்க்க பேருந்தைத் திருப்பியதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பாதுக்காப்பிற்காகப் போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பிகளில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விபத்துக்குக் காரணமான சம்மந்தபட்ட்ட வாகனத்தைக் காவல்துறையினர் தேடி வருவதாக Subang Jaya, மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.

Sebuah bas ekspres yang membawa 12 penumpang dari Shah Alam ke Johor hilang kawalan dan melanggar penghadang jalan di KESAS, Subang Jaya. Seorang penumpang cedera manakala pemandu dan yang lain mengalami kecederaan ringan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *