மீண்டும் விபத்துக்குள்ளான பல்கலைக்கழகப் பேருந்து! மாணவர்கள் காயம்!

top-news

ஜூன் 10,

இன்று அதிகாலை பகாங்கில் உள்ள UMP பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து TRELER லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 1 மணியளவில் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் மாரான் அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பேருந்தில் 28 பயணிகள் இருந்ததாகவும் அதில் 13 பயணிகள் UMP பல்கலைக்கழக மாணவர்கள் என் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுக்கொண்டிருந்த TRELER லாரியை மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai தெரிவித்தார். பேருந்தில் பயணித்த 28 பயணிகளும் பேருந்து ஓட்டுநரும் சிராய்ப்புக் காயங்களுடன் தப்பியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என மாரான் மாவட்டக் காவல் ஆணையர் Wong Kim Wai உறுதியளித்தார். வாகனங்களுக்கிடையிலான இடைவேளியைப் பேருந்து பின்பற்றாமல் எதிரில் சென்றுக் கொண்டிருந்த லாரியுடன் நெருக்கமாகச் சென்றதால் பேருந்து லாரியின் பின்னால் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Sebuah bas yang membawa pelajar UMP terlibat dalam kemalangan selepas melanggar belakang treler berhampiran Maran, awal pagi Isnin. Seramai 28 penumpang termasuk 13 pelajar cedera ringan. Tiada kematian dilaporkan. Polis mengesahkan pemandu bas hilang kawalan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *