25 பயணிகளுடன் கால்வாயில் கவிழ்ந்த சொகுசு பேருந்து!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
பினாங்கிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கால்வாயில் கவிழ்ந்தது. 31 வயது பேருந்து ஓட்டுநர் உட்பட 25 பயணிகளும் பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Johari Yahya உறுதிப்படுத்தினார். நேற்று நண்பகல் 1 மணியளவில் இந்த விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Johari Yahya தெரிவித்தார்.
பேருந்து ஓட்டுநர் தூக்கமின்மை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பயணிகளில் மூவருக்குச் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஓட்டுநர் உட்பட 22 பயணிகளும் எந்தவொரு காயமுமின்றி தப்பியதாக தாப்பா மாவட்டக் காவல் ஆணையர் Johari Yahya தெரிவித்தார்.
Sebuah bas mewah membawa 25 penumpang dari Pulau Pinang ke Kuala Lumpur terbalik ke dalam longkang di Tapah akibat pemandu mengantuk. Tiada kematian dilaporkan, namun tiga penumpang cedera ringan dan sedang dirawat di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *