பெத்தாலிங் ஜெயாவில் தீயில் கருகிய 2 மாடி வணிகக் கடை!

- Sangeetha K Loganathan
- 12 May, 2025
மே 12,
நேற்று இரவு பெத்தாலிங் ஜெயாவில் உள்ள 2 மாடி வணிகக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சம்மந்தப்பட்ட வணிகக் கடை முழுமையாகத் தீயில் கருகியது. நேற்று இரவு 9.26 மணிக்குத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். அவசர அழைப்பைப் பெற்றதும் 18 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.
பெத்தாலிங் ஜெயாவில் Jalan MJ/7, Taman Medan Maju Jaya பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் சம்மந்தப்பட்ட வணிகக் கடையின் 2 மாடிகளும் 80% தீயில் கருகியதாகவும் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar உறுதிப்படுத்தினார். தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
Sebuah bangunan kedai dua tingkat musnah 80 peratus dalam kebakaran di Taman Medan Maju Jaya, Petaling Jaya malam tadi. Tiada mangsa dilaporkan, dan punca kebakaran masih dalam siasatan. Kebakaran berjaya dipadam sepenuhnya oleh pasukan bomba.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *