BRIEF-i 50 மில்லியன் கடனுதவி ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்! - Datuk R.Ramanan அறிவிப்பு!
.jpg)
- Thina S
- 28 Jun, 2024
தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சுடன் BANK RAKYAT இணைந்து இந்தியர்களுக்கானச் சிறப்பு கடன் உதவித் திட்டத்தின் வாயிலாக 43 பேருக்கு 3.8 மில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளதாகத் துணை அமைச்சர் Datuk Ramanan இன்று தெரிவித்தார். மேலும் 5.7 மில்லியன் மதிப்பிலான 135 விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருப்பதாக அவர் தெரிவித்தார், இதுவரையில் 1000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்ற நிலையில் முதற்கட்டமாக 43 பேருக்கு 3.8 மில்லியன் ரிங்கிட் வழங்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொழில்முனைவோர் கூட்டுறவு அமைச்சுடன் BANK RAKYAT இணைந்து நடத்தும் BRIEF-i திட்டத்திற்காக 50 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களைச் சரி பார்த்து 50 மில்லியன் ரிங்கிட்டை முழுமையாகப் பயன்படுத்தவிருப்பதாக KUSKOP துணை அமைச்சர் Datuk Ramanan நம்பிக்கை அளித்தார்.
சிறுபான்மை சமூகத்தினரில் தொழில்முனைவோரையும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டியது தற்போதைய அடிப்படை தேவையாக இருக்கும் நிலையில் BRIEF-i திட்டத்தை முழுமையாக நம் இந்தியச் சமூகத்தினர் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகப் பல்வேறு முயற்சிகளை மடானி அரசு நடத்தி வருவதாக KUSKOP துணை அமைச்சர் Datuk Ramanan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *