முஸ்லிம் அல்லாதவர்களை களமிறக்கினால் மலாய்க்காரர் அல்லாதவர்களை பாஸ் கட்சியால் கவர முடியும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 11-

மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களைக் கவர பாஸ் கட்சிக்கு அரசியல் ஆய்வாளர்கள் இரண்டு முக்கிய வியூகங்களை பரிந்துரைத்திருக்கின்றனர்.ஒன்றாவது, பொதுத் தேர்தலில், அக்கட்சி முஸ்லிம் அல்லாதவர்களை பாதுகாப்பான அல்லது வெற்றிபெறக் கூடிய தொகுதிகளில் தனது வேட்பாளர்களாக களமிறக்க வேண்டும்.

இத்தகைய வியூகத்தை அது. தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கிளந்தான் உட்பட திரெங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலும் (எஸ்ஜி4) மேற்கொள்ள வேண்டும்.இரண்டாவது, மலாய்க்கார வாக்காளர்கள் அல்லாதவர்கள் மத்தியில் நிலவும் தவறான எண்ணத்தை மாற்ற அது தனது அரசியல் பேச்சுகளில் மற்ற மதத்தினரை புண்படுத்தும் செயல்பாடுகளை கைவிட வேண்டும் என்று, நுசாந்தாரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் தெரிவித்தார்.

எஸ்ஜி4 மாநிலங்களின் நிர்வாகத்தில் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை என்கிற நிலையில், "இதுவரையில், ஜசெக அல்லது பிகேஆர் கட்சிகளைவிட தான் ஒரு சிறந்த கட்சி என்பதை பாஸ் நிரூபிக்கவில்லை.
“தனது தீவிரவாதமுடைய பேச்சுக்களின் தோரணையை பாஸ் அவசியம் குறைத்துக் கொள்ள வேண்டும்.

தேசிய முன்னணி அல்லது பக்காத்தான் ஹராப்பானினால் ஆட்சி புரியப்பட்டு வரும் மாநிலங்களைக் காட்டிலும், கிளந்தான், திரெங்கானு. கெபா மற்றும் பெர்லிஸ் மாநிலங்களை நல்ல மற்றும் சிறப்பான முறையில் ஆட்சிபுரிய முடியும் என்ற தகுதியை வெளிப்படுத்துவதில் அது கவனம் செலுத்த வேண்டும்" என்று எஃப்எம்டியிடம் அஸ்மி தெரிவித்தார்.

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசாங்கம் மீது அதிருப்தி அடைந்திருக்கும் மலாய்க்காரர் அல்லாத குறிப்பாக இந்தியர்கள் மற்றும் சீனர்களின் வாக்குகள் மீது பாஸ் கட்சி இலக்குக் கொண்டிருக்கிறது என்று, அக்கட்சியின் உதவித் தலைவர் அமார் நிக் அப்துல்லா இதற்கு முன்னர் கூறியிருந்தார்.அதோடு, மலாய்க்காரர் அல்லாதவர்களின் மனதைக் கவர்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் அவர் ஒப்புக் கொண்டிருந்தார்.

மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறவும் இளைஞர்கள் மத்தியிலான தனது ஆதரவைப் பேணவும், தனது தூய்மையான தோற்றத்தையும் நேர்மையையும் பாதுகாக்க அதிக உறுதியான வழிகளைக் கண்டறியும் சவாலை பாஸ் தற்போது எதிர்நோக்கி இருக்கிறது என்று அஸ்மி கூறினார்.

இதனிடையே, பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்தி, பாஸ் கட்சிக்கு சாதகமாக அமையக் கூடும் என்றும் ஆனால், அந்த இஸ்லாமியக் கட்சி பல விவகாரங்களில் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மலாயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அவாங் அஸ்மான் குறிப்பிட்டார்.

"இவற்றில், மத சுதந்திரமும் இன நல்லிணக்கமும் அடங்கும். வெற்று கூற்றுகளையும் அது நிராகரிக்க வேண்டும். இத்தகைய மாற்றங்களின்றி. பெரிக்காத்தான் நேஷனல்' குறிப்பாக பாஸ் கட்சியினால், அதிருப்தி அடைந்திருக்கும் மலாய்க்காரர் அல்லாதவர்களின் ஆதரவை நிச்சயமாகப்பெற முடியாது. 'அதோடு, தற்போது பக்காத்தான் ஹராப்பான் மீது அதிருப்தி அடைந்திருக்கும் அத்தகையோர் மத்தியில் ஒரு தற்காலிகமான அதிருப்தியாக அது இருக்கச் செய்வதற்கு, பாஸ் கட்சியின் இத்தகைய காரணங்கள் வழிவகுத்து விடும்" என்று அவாங் தெரிவித்தார்.

"மேலும், நீண்ட காலமாக நீடித்து வரும், முஸ்லிம் அல்லாதவர்களை கஃபீர்கள் என்று முத்திரை குத்தும் தனது செயலையும் பாஸ் கைவிட வேண்டும். தேர்தலில் அக்கட்சி முஸ்லிம் அல்லாதவர்களை தனது வேட்பாளர்களாக நிறுத்துவதிலும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்' என்றும் அவாங் கூறினார்.

Penganalisis politik mencadangkan PAS menawan pengundi bukan Melayu dengan meletakkan calon bukan Islam di kawasan selamat dan mengelakkan retorik ekstrem. PAS juga perlu buktikan keupayaan mentadbir lebih baik berbanding negeri Pakatan Harapan dan Barisan Nasional.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *