இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு!

top-news

மே 11,

மலேசியாவில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விடவும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார். 15 முதல் 39 வயதினர்கள் அதிகமாகப் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் இதுவரையில் 192,857 இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் அதில் 115,714 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

தற்போது போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு மறுவாழ்வு அமைப்பது மட்டும் நமது பொறுப்பு அல்ல என்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுப்படுபவர்களை அடையாளம் கண்டு போதைப்பொருளை முழுவதுமாகத் துடைத்தொழிக்கும் பொறுப்பும் நமக்கு இருக்க வேண்டும் என Datuk Ruslin Jusoh தெரிவித்தார். போதைப் பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாகத் திரங்கானு மாநிலம் என்பதையும் அவர் வலியுறுத்தினார். கடந்த ஆண்டு திரங்கானுவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்ட 12,004 பேரில் 6,800 பேர் அதாவது 56% இளைஞர்கள் என்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh தெரிவித்தார்.

Ketua Pengarah AADK, Datuk Ruslin Jusoh, mendedahkan bahawa 60% daripada penagih dadah di Malaysia tahun lalu terdiri daripada belia berusia 15 hingga 39 tahun, dengan peningkatan drastik sebanyak 32.5%. Beliau menyeru kerjasama ibu bapa dan sekolah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *