சமூகப் பொறுப்புடனானக் கல்வியாளர்களை உருவாக்குவோம்! – டேவிட் மார்ஷல்!
- Thina S
- 09 Jun, 2024
அடுத்த தலைமுறை மாணவர்கள் சுய ஒழுக்கத்துடனும்
கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் எனும் நோக்கத்தில் தன்முனைப்பு
பயிற்சி முகாம் தமிழர் குரல் மகளிர் அணி திருமதி லட்சுமி அவர்களின் தலைமையில் பினாங்கு விஸ்மா தமிழர் குரல் மண்டபத்தில் நடந்தேறியது.
மலேசியத் தமிழர் குரலின் தோற்றுநர் டேவிட்
மார்ஷல் சிறப்பு விருந்தினராகவும் இந்தியச் சமூகத்தின் மீதான அக்கறைக் கொண்ட
கல்வியாளர்களை உருவாக்கும் இது போன்ற தன்முனைப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். செதுக்கப்பட்ட கல்லே சிலையாகும், சிறு வயதிலேயே சமூகப் பொறுப்புடனும் சமூகச்
சீர்த்திருந்த்தங்களையும் நினைவில் கொண்டு நாம் கற்கும் கல்வியானது நம்
வாழ்வாதாரத்தை மட்டுமின்றி, நம் சமூகத்தின் உருமாற்றத்திற்கும் அது
வித்திடும் என டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
ஒழுக்கச்சீர் கேடானச் செயல்களும் அதனால்
ஏற்படும் பின்விளைவுகளையும் ஆசிரியர் திரு,இராமச்சந்திரன் மாணவர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.
இத்தன்முனைப்பு முகாமில் 12 முதல் 17 வயதிலான 30 மாணவர்கள் பங்கேற்று பயன்பெற்றதாக
ஏற்பாட்டுக் குழு தலைவர் திருமதி லட்சுமி தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *