தலைநகரில் 2 கேளிக்கை மையங்களை மூடிய DBKL! 27 பேர் கைது!

top-news

ஜூன் 8,

தலைநகரில் முறையான் அனுமதியின்றி இயங்கி வந்த 2 கேளிக்கை மையங்களில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகமும் தேசிய குடிநுழைவுத் துறையும் மேற்கொண்ட சோதனையில் 27 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட 2 கேளிக்கை மையங்களிள் ஒன்று அனுமதியில்லாமல் இயங்கி வந்ததாகவும் மற்றொரு கேளிக்கை மையத்தின் விண்ணப்பம் நிலுவையில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சம்மந்தப்பட்ட 2 கேளிக்கை மையங்களும் முறையான அனுமதியின்றி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிகாலை வரையில் செயல்பட்டு வந்ததாகவும் சோதனையில் தெரிய வந்துள்ளது. மதுபானங்களுடன் போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் கேளிக்கை மையத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் நகராண்மைக்கழகம் தெரிவித்துள்ளது.

Dua pusat hiburan di ibu negara yang beroperasi tanpa kelulusan ditutup oleh DBKL dan Imigresen. Seramai 27 warga asing ditahan, 19 disyaki ambil dadah. Pelbagai peralatan hiburan, alkohol dan dadah turut dirampas dalam serbuan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *