தலைநகரில் சட்டவிரோதக் கிடங்குகள்! DBKL தொடர் சோதனை!

top-news
FREE WEBSITE AD

Cheras பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பொருள் கிடங்கைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தற்காலிகமாக மூடியது, Taman Miharja Cheras பகுதியில் இயங்கி வந்த கிடங்கில் உள்ள பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் அபராதமும் விதித்துள்ளது.

வணிக உரிமம் மீறல், வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்தியது, சுகாதார மீறல் போன்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட கிடங்கின் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்தது.

சம்மந்தப்பட்ட கிடங்கில் இது போன்ற குற்றச்சம்பவங்கள் நடந்து வருவதாகப் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டதாகவும், இச்சோதனை யாரையும் கைது செய்யவில்லை எனக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உறுதிப்படுத்தியது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *