RM559,190 மதிப்பிலானப் போலி மருந்துகளும் அழகு சாதனப்பொருள்களும் பறிமுதல்! இருவர் கைது!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
அங்கீகரிக்கப்படாத மருந்துகளையும் அழகு சாதனப் பொருள்களையும் விற்பனை செய்து வந்த இருவரை எல்லை பாதுகாப்பு கடத்தல் பிரிவின் சிறப்புப் படையான PGA கைது செய்துள்ளது. பினாங்கு BUKIT MERTAJAM பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவு இருவரில் ஒருவர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஆடவர் என்றும் மற்றொருவர் உள்ளூர் ஆடவர் என்றும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கீகரிக்கப்படாத சுகாதாரமற்ற மருந்துகளையும், ஒப்பனை திரவங்கள், அழகு சாதனப் பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சோதனையின் மூலமாக RM559,190 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக PGA சிறப்புப் படையின் உதவி இயக்குநர் Shahrum Hahim தெரிவித்தார். சம்மந்தப்பட்ட பொருள்கள் அனைத்தும் மியன்மாரிலிருந்து சட்டவிரோதமாக மலேசியாவிற்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்து வருவதாக PGA சிறப்புப் படையின் உதவி இயக்குநர் Shahrum Hahim தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் மியன்மாரிலிருந்து கொண்டு வரப்படும் இந்த பொருள்களைச் சட்டவிரோதமாக மலேசியாவில் இருக்கும் மியான்மார் தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்து வருவதாகத் தெரிய வந்துள்ளது.
PGA menahan dua individu terdiri daripada seorang warga tempatan dan seorang warga asing dalam serbuan di Bukit Mertajam, Pulau Pinang. Mereka dipercayai menjual ubat dan kosmetik tidak berdaftar sejak dua tahun lalu. Barang rampasan dianggarkan bernilai RM559,190.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *