நெரிசல் மிகுந்த 121 பள்ளிகளில் மேம்பாட்டுப் பணிகள்-கல்வியமைச்சு அறிவிப்பு!

- Muthu Kumar
- 06 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 6-
கூடுதல் வகுப்பறைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தேவையான உபகரணங்களையும் பெறுவதற்கு நாடு தழுவிய அளவில் ஏழு மாநிலங்களை உட்படுத்தி நெரிசல் மிகுந்த 121 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக எட்டு கோடியே 80 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
பிரதான பள்ளிகள், ஒருங்கிணைந்த சிறப்பு கல்வித் திட்டத்தை உட்படுத்தி இந்த மேம்பாடுகள் இடம்பெற்றிருக்கும்.கட்டுமான செயல்முறையை விரைவுப்படுத்துவதற்காக தொழில்மயமாக்கப்பட்ட கட்டட அமைப்பு முறை பயன்படுத்தப்படுவதால், இவ்வாண்டுக்குள் அவ்வேலைகள் முழுமைப் பெறும்.உயர் ரக
பள்ளிகளின் தர மேம்பாட்டுத் திட்டத்திற்கான
ஒப்புதல் கடிதத்தை பொதுப்பணி துணையமைச்சர் டத்தோஸ்ரீ அஹ்மட் மஸ்லான் நேற்று நிறைவு செய்ததாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிலாங்கூரில் மொத்தம் 103 பள்ளிகள் இத்திட்டத்தில் இணைக்கப்படும் என்பதால், அதிக எண்ணிக்கையிலான ஈடுபாட்டைக் கொண்ட மாநிலமாக அது கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பேராக்கில் எட்டு பள்ளிகள், பகாங்கில் நான்கு, நெகிரி செம்பிலானில் மூன்று,திரெங்கானு, கோலாலம்பூர், பினாங்கு ஆகியவற்றில் தலா ஒரு பள்ளி என்று பதிவாகியுள்ளது.
அதிக மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்கு உகந்த கல்விச் சூழலை அணுகுவதை உறுதி செய்வதற்கும் இந்நடவடிக்கை ஒரு பயனுள்ள குறுகிய கால தீர்வாகும்.
Kerajaan mengenal pasti 121 sekolah sesak di tujuh negeri untuk menerima penambahbaikan infrastruktur dengan peruntukan RM88 juta. Pembinaan menggunakan sistem industri binaan dijangka siap tahun ini bagi memastikan persekitaran pembelajaran lebih selesa untuk pelajar dan guru.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *