போலி ‘டச் அண்ட் கோ' அதிகாரிகளிடம் ஆசிரியை 23,000 வெள்ளியை இழந்தார்!

- Muthu Kumar
- 05 Jun, 2025
கங்கார், ஜூன் 5-
'டச் 'அண்ட் கோ அதிகாரிகள் மற்றும் அமலாக்க அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் தொலைபேசி அழைப்பு மோசடி கும்பலிடம் சிக்கிய ஆசிரியை தனது சேமிப்புத் தொகையான 23.000 வெள்ளியை இழந்தார்.
ஆராவ் நகரின் பாவ் எனுமிடத்திலுள்ள ஒரு பள்ளியில் பணிபுரியும் 26 வயதான அந்த ஆசிரியைக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி மதியம் 12.21 மணிக்கு சந்தேக நபரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக ஆராவ் மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன்ட் அகமது மொஹ்சின் முகமது ரோடி கூறினார்.
மற்றவர்களின் கணக்குகளில் இருந்து பணத்தைத் திருடுவதற்கு உங்களின் டச் 'அண்ட் கோ கார்டு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த சந்தேக நபர் அந்த ஆசிரியையிடம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பின்னர் அந்த அழைப்பு பினாங்கு காவல் துறை தலைமையகத்தின் அதிகாரிகளுடன் இணைக்கப்பட்டது. பணமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களில் அந்த ஆசிரியை ஈடுபட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பின்னர், சந்தேக நபர் கொடுத்த வங்கிக் கணக்கிற்கு ஒரே பரிவர்த்தனையில் மொத்தம் 23,000 வெள்ளியை மாற்றுமாறு ஆசிரியைக்கு உத்தரவிடப்பட்டது.
தனது வங்கிக் கணக்கு முடக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்டவர் அதே நாளில் பணப் பரிவர்த்தனையைச் செய்துள்ளார் என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.அதன் பின்னர் தகவல்களை இருமுறை சரிபார்த்த அந்த ஆசிரியை தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மறுநாள் காவல்துறையில் புகார் அளித்ததாக அகமது மொஹ்சின் கூறினார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெர்லிஸ் காவல் துறை தலைமையகத்தின் வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவும் இதன் தொடர்பில் மேல் விசாரணை நடத்தி வருகிறது என்று அவர் கூறினார்.
Seorang guru wanita berusia 26 tahun dari Arau kehilangan RM23,000 akibat sindiket penipuan panggilan telefon yang menyamar sebagai pegawai Touch 'n Go dan polis. Mangsa diperdaya memindahkan wang bagi mengelakkan akaun banknya dibekukan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *