டான்ஸ்ரீ வீட்டின் ரகசிய அறையில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: எம்ஏசிசி தகவல்.

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14-

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலைத் திட்டமொன்றுக்காக ஒதுக்கப்பட்ட "சுக்குக்" நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் டான்ஸ்ரீ ஒருவருடைய வீட்டின் ரகசிய அறையில் ஆயுதங்கள் - பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் காரணமாகத்தான், அந்நபரிடமிருந்து வாக்குமூலம் பதிவு " செய்யப்படும் வேளையில் அங்கு ஊழல் வியூக எதிர்ப்புக் குழுவின் (ஏசிடிஎஸ்) அதிரடி வீரர்கள் காவல் பணியை மேற்கொண்டனர் என்று மலேசிய லஞ்சஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று விளக்கமளித்தது.

செராஸ், பண்டார் தாசிக் செலாத்தானில் உள்ள அந்நபரின் வீட்டில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட சோதனை பற்றி விவரித்தபோது எம்ஏசிசி இந்த விளக்கத்தை அளித்தது.அந்த வீட்டில் உள்ள ஒரு ரகசிய அறையில் விலை உயர்ந்த பொருட்களும் ஆயுதங்களும் இருப்பதாக ஏம்ஏசிசி ஆணையத்தின் தொடர்பு பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற எம்ஏசிசி அதிகாரிகள், அப்பொருட்களை கைப்பற்றினர். அந்த அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக
ஏசிடிஎஸ் வீரர்கள் அங்கு நிறுத்தப்பட்டனர் என்றும் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் எம்ஏசிசி கூறியது.

ஆடம்பர கைப்பைகள், கைக்கடிகாரங்கள், தங்கக் கட்டிகள், நாணயங்கள், தங்கச் சிலைகள், வைரக்கற்கள், இதர பல ஆபரணங்களை எம்ஏசிசி கைப்பற்றியது. முப்பது லட்சம் வெள்ளி மதிக்கத்தக்க 84 ஆடம்பர கைப்பைகள், பத்து லட்சம் வெள்ளி மதிப்பிலான 11 கைக்கடிகாரங்கள், முப்பது லட்சம் வெள்ளி மதிப்புள்ள தங்கக் சிலைகள், நாற்பது லட்சம் வெள்ளி மதிப்புள்ள வைரக்கற்கள், நகைகள் போன்றவை அங்கு கைப்பற்றப்பட்டன.

ஒன்றரை லட்சம் வெள்ளி மதிப்புடைய ஆடம்பர சூதாட்டச் சாதனமும் கைப்பற்றப்பட்டது. மேலும், அந்த வீட்டில் துப்பாக்கித் தோட்டாக்களினால் துளைக்க முடியாத ரகசிய அறையொன்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறைக்குள் சுடும் ஆயுதங்களும் தோட்டாக்களும் காணப்பட்டன. அந்த ஆயுதங்கள் அவ்வீட்டின் உரிமையாளரான அந்த டான்ஸ்ரீயின் பாதுகாவல் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதால் அவற்றை எம்ஏசிசி அதிகாரிகள் கைப்பற்றவில்லை என்று எம்ஏசிசி குறிப்பிட்டது.பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ஒரு கோடியே அறுபது லட்சம் வெள்ளியாகும்.

Rumah seorang Tan Sri diserbu oleh SPRM berhubung salah guna dana sukuk. Dalam bilik rahsia, pelbagai barangan mewah, senjata dan perhiasan bernilai RM16 juta ditemui. Senjata tidak dirampas kerana milik syarikat keselamatan sah Tan Sri tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *