ஸஃப்ருல் வெளியேறியதில் எங்களுக்கு மகிழ்ச்சி- புவாட்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 7-

அம்னோவை விட்டு தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஜிஸ் வெளியேறி இருப்பதை கட்சி உறுப்பினர்கள் கைத்தட்டி வரவேற்றிருக்கின்றனர். அவரின் இத்தகைய செயலால் கட்சி உறுப்பினர்கள் யாரும் சினமடையவும் இல்லை.கட்சியை விட்டு வெளியேறும் முடிவை அவராகவே எடுத்திருப்பதையும் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர் என்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முஹமட் புவாட் ஸர்காஷி கூறியுள்ளார்.

“கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கூறியிருப்பதுபோன்று, கட்சி மீது விசுவாசம் இல்லையென்றால் வெளியேறுவதுதான் நல்லது. இதனால் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் யாரும் சினமடையவில்லை. அவர் வெளியேறாவிட்டால் அல்லது நீக்கப்பட்டிருக்காவிட்டால்தான் கட்சி உறுப்பினர்கள் கோபமடைந்திருப்பார்கள்" என்று புவாட் தெரிவித்துள்ளார்.

எனினும், அம்னோ தலைமைத்துவம் மற்றும் அதன் கொள்கையை வெளிப்படையாக எதிர்த்த பிறகும் கட்சியை விட்டு வெளியேறாமல் இருந்த அனுவார் மூசாவைக் காட்டிலும் ஸஃப்ருலின் நடவடிக்கை மரியாதைக்குரியது என்று அவர் கூறியுள்ளார்.
"அனுவாரைக் காட்டிலும் ஸஃப்ருல் மிகவும் நல்லவர். அவர் கட்சியை விட்டு வெளியேறினார்.

ஆனால் அனுவாரோ கட்சியை விட்டு வெளியேற மறுத்து விட்டார். உடலில் ஒரு முன் போல் இருக்கவே அனுவார் விரும்பினார். கட்சிக்குள் இருந்து கொண்டே அம்னோவுக்கு எதிராக செயல்பட்டார். பெர்சத்து கட்சியின் ஏஜெண்டாகவும் செயல்பட்டார்."பின்னர் கட்சியை விட்டு அனுவார் மூசா நீக்கப்பட்டபோது அம்னோ உறுப்பினர்கள் கைத்தட்டி கட்சியின் முடிவை வரவேற்றனர். பாஸ் கட்சியில் சேரும் வரையில் அம்னோவை அனுவார் சாடிக் கொண்டே இருந்தார்" என்று புவாட் தெரிவித்துள்ளார்.

கட்சியை விட்டு ஸஃப்ருல் வெளியேறியது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை என்று, அம்னோவின் முன்னாள் தலைமைச் செயலாளருமான அனுவார் குற்றஞ்சாட்டி இருப்பதற்கு பதிலடியாக புவாட் இவ்வாறு கூறியுள்ளார்.கட்சியை விட்டு வெளியேறும் தமது முடிவு குறித்து சினமடையாததற்காக அம்னோ தலைவருக்கு எஸஃப்ருல் நன்றி கூறியதை புவாட் சுட்டிக் காட்டினார்.பிகேஆர் கட்சியில் சேருவதற்காக, அம்னோவில் தாம் வகிக்கும் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதாக கடந்த மாதத்தில் ஸஃப்ருல் அறிவித்திருந்தார்.

Tengku Zafrul keluar dari UMNO disambut baik oleh ahli parti, tiada kemarahan timbul. Pemimpin UMNO Puad Zarkashi memuji tindakannya berbanding Annuar Musa yang kekal dalam parti tetapi mengkritik kepimpinan secara terbuka sebelum akhirnya disingkir.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *