விபத்தில் இறந்த போலீஸ் அதிகாரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல்- சிவநேசன்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, மே 14-

நேற்று லங்காப்பில் போலீஸ் சேமபடை லாரி ஒன்றை மண் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்தானது.இவ்விபத்தில் 8 போலீஸ்காரர்கள் மற்றும் மண் லாரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து விட்டனர். இவர்கள் அனைவருக்கும் பேராக் மாநில அரசாங்க சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் மனவேதனையுடன் தெரிவித்துக் கொண்டார்.

இம்மாதிரியான கோர விபத்தில் போலீஸ் தரப்பினர் சிக்கியது இது இரண்டாவது முறையாகும். கடந்த 25 வருடங்களுக்கு முன்னதாக இதுபோன்ற கோர விபத்தை நினைவுகூர்ந்தார். தெலுக் இந்தான் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றிய பின் காலையில் அவர்களது இல்லத்திற்கு ஈப்போவிற்கு திரும்பும் வேளையில் இந்த கோர விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்ததாக அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக இறந்தவர்களின் வீட்டிற்கு நேரடியாக செல்லும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். அதோடு மிக விரைவில் கூடவுள்ள மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டில் பேராக் மாநில சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளராக தம்மை மாநில அரசு நியமனம் செய்துள்ளது. இதற்கிடையில் இப்படியொரு கோர விபத்து அதுவும் சித்ரா பௌர்ணமி திருவிழாவில் பணியாற்றிய போலீஸ் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளதை பார்த்து மிகவும் வேதனைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Lapan anggota polis dan tiga lagi maut dalam nahas di Langkap antara lori polis dan lori tanah. Mereka dalam perjalanan pulang selepas bertugas sempena perayaan Chitra Pournami. Kerajaan negeri Perak menyampaikan ucapan takziah dan akan bantu keluarga mangsa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *