டாக்டர் ஜூஹாரியை சட்டமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வேண்டுகோள்
- Shan Siva
- 01 Jul, 2024
( தி.ஆர்.மேத்தியூஸ்)
சிம்பாங் அம்பாட், ஜூலை 2: பினாங்கு மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகள் மற்றும் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக,மாநில ஆட்சிக்குழுவில் இடம்பெற்றிருக்கும் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜூ சோமு,பினாங்கு மாநில இந்தியர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு பொக்கிஷம் என மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநர் ஓம்ஸ் பா.தியாகராஜன் புகழாரம் சூட்டினார்.
பினாங்கு
மாநில அரசாங்கத்தில் தமிழ்ப்பள்ளிகளின் சிறப்பு நடவடிக்கைக் குழுத்
தலைவராக பொறுப்பேற்று,கல்வி அமைச்சரின் சிறப்பு
அதிகாரியாக இருந்து வரும் தியாகராஜ்
சங்கரநாராயணனுடன் இணைந்து,மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின்
மேம்பாடு மற்றும் மாணவர்களின் கல்வி
நலனில் அவர் மேற்கொண்டு வரும்
நடவடிக்கைகள் சிறப்பானது என்றார்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள
தோட்டங்கள் மற்றும் கம்பங்கள் ஆகியவற்றில்
ஏற்பட்டுள்ள வீடுகள், நிலங்கள் போன்றவற்றிலும் பிரச்சினைகளுக்கு
உரிய தீர்வு காண்பதற்கு ஆட்சிக்குழு
உறுப்பினர் என்ற வகையில் மாநில
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர் ஆற்றி வரும்
செயல்கள் யாவும் அளப்பரியது என
ஓம்ஸ் அறவாரியத்தின் இயக்குனருமான அவர் தெரிவித்தார்.
மலேசிய அரிமா சங்கத்தின் ஏற்பாட்டில்
தென் செபராங் பிறை, சிம்பாங்,அம்பாட் தாமான் புத்ரி
குனோங்கில் நடைபெற்ற மடானி ஒன்றுகூடல்,மற்றும் சிறப்பு சந்திப்பு
நிகழ்வில் கலந்துக் கொண்டு அவர்
இவ்வாறு உரையாற்றினார்.
மேலும் அவர் தமதுரையில், இன்னும் சில தினங்களில்
நடைபெறவிருக்கும் சுங்கை பாக்காப் சட்டமன்ற
இடைத்தேர்தலில்,பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வெற்றிப்
பெற்றால்,ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு
மற்றும் நிபோங் தெபால் நாடாளுமன்ற
மக்கள் சேவை மையத்தின் சிறப்பு
அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் ஆகியோர்
இணைந்து தொகுதி மக்களின் பிரச்சனைகளை
சட்டமன்றத்திற்கு கொண்டுச் செல்ல ஏதுவாக
இருக்கும் என்றார்.
சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி
மக்களுக்காக சேவை செய்ய உறுதியளித்திருக்கும்
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர்
ஜூஹாரிக்கு,வரும் இடைத்தேர்தலில்
வாக்களித்து, அவரை
சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு தொகுதி
வாக்காளர்களை ஓம்ஸ் பா.தியாகராஜன்
கேட்டுக் கொண்டார்.
ஒருநாள் நிகழ்வாக மாலையில் நடைபெற்ற
அரசியல் பிரச்சாரத்தில்,ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜூ சோமு,செந்தோசா சட்டமன்ற
உறுப்பினர் குணராஜ், சட்டமன்ற
வேட்பாளர் டாக்டர் ஜுஹாரி,சிலாங்கூர்
மாநில தமிழப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் முருகன், கல்வி அமைச்சரின் சிறப்பு
அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
திரளான இந்திய வாக்காளர்களும்,நம்பிக்கைக் கூட்டணியின் ஆதரவாளர்களும் கூடியிருந்த இந்நிகழ்வின் அறிவிப்புப் பணியை மலேசியப் புகழ் தங்கக் குரலோன் கா.சந்திரகாந்தன் சிறப்பாக மேற்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *